Oppo K14 ஸ்மார்ட்போன் Bluetooth SIG சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. இது அந்த போனின் உலகளாவிய அறிமுகம் மிக விரைவில் இருக்கப்போவதை உறுதிப்படுத்துகிறது.
Photo Credit: Oppo
Oppo K14 5G Bluetooth SIG சான்று; 7000mAh பேட்டரி, Snapdragon 6 Gen 4, 120Hz AMOLED
ஒப்போ (Oppo) போன்களுக்குன்னு இந்தியால ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கு. அவங்க எல்லாருக்கும் இப்போ ஒரு சூப்பர் எக்ஸைட்டிங் நியூஸ் வந்திருக்கு. ஒப்போ தன்னோட பட்ஜெட் மற்றும் பெர்பார்மன்ஸ் சீரிஸ்ஸான 'K' சீரிஸ்ல அடுத்த போனை களமிறக்க தயார் ஆகிட்டு வராங்க. Oppo K14 ஸ்மார்ட்போன் இப்போ அதிகாரப்பூர்வமா Bluetooth SIG சான்றிதழ் தளத்துல தென்பட்டுருக்கு. இதோட அர்த்தம் என்னன்னா, இந்த போன் இப்போ லான்ச் ஆகுறதுக்கு 100% ரெடி ஆகிடுச்சுனு அர்த்தம். ஆமா மக்களே! ஏற்கனவே நாளைக்கு (பிப்ரவரி 10) இந்தியால Oppo K14x 5G போன் லான்ச் ஆகப்போகுது. அதுக்குள்ளயே அதோட மெயின் மாடலான 'Oppo K14'-ஐயும் ஒப்போ லிஸ்ட் பண்ணிட்டாங்க. லீக் ஆன தகவல்படி, இந்த போன் CPH2869 அப்படிங்கிற மாடல் நம்பர்ல சான்றிதழ் வாங்கிருக்கு. இது ப்ளூடூத் 5.4 வெர்ஷனை சப்போர்ட் பண்ணும்னு தெரியவந்துருக்கு.
பொதுவா ஒரு போன் Bluetooth SIG சான்றிதழ் பெற்றுடுச்சுனா, அது அடுத்த ஒரு மாசம் அல்லது ஒன்றரை மாசத்துல மார்க்கெட்டுக்கு வந்துடும். அதனால இந்த Oppo K14 வர்ற மார்ச் 2026-ல இந்தியால ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருக்கு. கடந்த வருஷம் வந்த K13-ஐ விட இது பல மடங்கு பவர்ஃபுல்லா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
ஒப்போ இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமா எதையும் சொல்லலனாலும், கசிஞ்ச தகவல்களை வெச்சு பார்க்கும்போது சில விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு:
Oppo K14x 5G-யோட விலை சுமார் ரூ. 15,000-க்குள்ள இருக்கும்னு சொல்லப்படுது. ஆனா இந்த மெயின் மாடலான Oppo K14-ன் விலை ரூ. 19,000 முதல் ரூ. 22,000 வரை இருக்கலாம். இது மத்த பட்ஜெட் போன்களுக்கு, குறிப்பா Vivo T-சீரிஸ் மற்றும் Samsung M-சீரிஸ் போன்களுக்கு ஒரு பெரிய போட்டியா இருக்கும்.
உங்களுக்கு ஒரு பட்ஜெட் விலையில செம பேட்டரி பேக்கப் இருக்கிற, பார்க்கவும் ஸ்டைலா இருக்குற 5G போன் வேணும்னா, நீங்க தாராளமா இந்த Oppo K14-க்காக வெயிட் பண்ணலாம். சோ மக்களே, இந்த புது போனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இதே விலையில நீங்க Oppo-வை சூஸ் பண்ணுவீங்களா இல்ல வேற பிராண்ட் போன் வாங்குவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Leaked Schematics Show Dual-Airflow Cooling Architecture; Launch Timeline Tipped
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels