அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026-ல் டேப்லெட்டுகள் மீது 60% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபேட் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் வரை அனைத்திற்கும் சிறந்த சலுகைகள் உள்ளன.
Photo Credit: Apple
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2026 ஆப்பிள், சாம்சங், லெனோவா மற்றும் பலவற்றிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட டேப்லெட்களைக் கொண்டுவருகிறது.
ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணவோ இல்ல ஆபிஸ் வேலையை ஈஸியா முடிக்கவோ ஒரு நல்ல டேப்லெட் வாங்கணும்னு பிளான் பண்ணிருக்கீங்களா? "ஐபேட் வாங்கணும்னு ஆசை, ஆனா பட்ஜெட் இடிக்குதே" அப்படின்னு யோசிச்சீங்கனா, இதோ அமேசானோட Great Republic Day Sale 2026 உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பைக் கொண்டு வந்திருக்கு. ஆப்பிள் முதல் சாம்சங் வரை முன்னணி பிராண்டுகளோட டேப்லெட்டுகளுக்கு அமேசான் அள்ளி வீசுற ஆஃபர்களைப் பார்த்தா நீங்களே அசந்து போயிருவீங்க. வாங்க, எதெல்லாம் "ஒர்த்" டீல்னு ஒன்னு ஒன்னா பார்ப்போம்.
இந்த சேல்ல ஆப்பிள் ரசிகர்கள் காத்துட்டு இருந்த ஒரு பெரிய விலைக்குறைப்பு கிடைச்சிருக்கு:
● Apple iPad Air (M3 Chip): சமீபத்திய M3 சிப்செட் கொண்ட இந்த பவர்ஃபுல் ஐபேட், ₹59,900-லிருந்து குறைந்து இப்போ வெறும் ₹50,990-க்கு கிடைக்குது. வங்கி சலுகைகளோட சேர்த்தா இன்னும் கம்மியாகும்!
● Apple iPad 11" (A16 Chip): மாணவர்களுக்கு ஏத்த இந்த மாடல் இப்போ ₹30,000 பட்ஜெட்டுக்குள்ள வர வாய்ப்பு இருக்கு.
ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் - மிரட்டலான ஆஃபர்கள்:
ஆண்ட்ராய்டு உலகத்துல சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் இந்த முறை மிரட்டுறாங்க:
● Samsung Galaxy Tab S10 Lite (AI): புதிய கேலக்ஸி AI வசதி மற்றும் S-Pen பாக்ஸிலேயே வர்ற இந்த டேப்லெட், ₹41,999-லிருந்து அதிரடியாகக் குறைந்து ₹31,999-க்கு கிடைக்குது.
● Xiaomi Pad 7: 144Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட இந்த மிரட்டலான டேப்லெட், ₹37,999-லிருந்து குறைந்து இப்போ ₹27,999-க்கு லிஸ்ட் ஆகியிருக்கு.
● OnePlus Pad Go 2: ₹35,999 மதிப்புள்ள இந்த டேப்லெட் இப்போ வெறும் ₹31,999-க்கு உங்க கைக்கு வரும்.
பட்ஜெட் டேப்லெட்டுகள் - ₹15,000-க்குள்
"குறைந்த விலையில நல்ல டேப்லெட் வேணும்"னு நினைக்கிறவங்களுக்காக:
● Samsung Galaxy Tab A9+: ₹24,999-க்கு வித்த இந்த மாடல் இப்போ வெறும் ₹12,499-க்கு கிடைக்குது. 50% நேரடி தள்ளுபடி மக்களே!
● Lenovo Idea Tab 5G: ஸ்டைலஸ் பென் மற்றும் 5G வசதியோட வர்ற இந்த டேப்லெட் இப்போ வெறும் ₹20,998-க்கு விற்பனைக்கு வந்துருக்கு.
● Redmi Pad SE: பட்ஜெட் பிரியர்களுக்கு வெறும் ₹12,599 ஆரம்ப விலையிலயே தரமான டேப்லெட்டுகள் கிடைக்குது.
விலை குறைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், உங்ககிட்ட SBI Credit Card இருந்தா கூடுதல் லாபம் கிடைக்கும். பிரைம் மெம்பர்களுக்கு 12.5% வரையும், மற்றவர்களுக்கு 10% வரையும் உடனடி தள்ளுபடி (Instant Discount) உண்டு. இதுபோக, பழைய போன் அல்லது டேப்லெட்டை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் பண்ணீங்கன்னா, இன்னும் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரைக்கும் கூட மிச்சப்படுத்தலாம்.
நீங்க ஒரு ஸ்டூடண்டா இருந்தா Samsung Tab A9+ அல்லது Xiaomi Pad 7 பெஸ்ட் சாய்ஸா இருக்கும். இதுவே ஒரு ப்ரொபஷனலா இருந்தா iPad Air M3 அல்லது Tab S10 Lite-ஐ தாராளமா தேர்ந்தெடுக்கலாம். அமேசான்ல இந்த ஸ்டாக் சீக்கிரமே தீர்ந்துடும், அதனால இப்போவே உங்களோட ஃபேவரைட் டேப்லெட்டை ஆர்டர் பண்ணிடுங்க. இந்த டேப்லெட் டீல்கள்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு? ஐபேடா இல்ல சாம்சங்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Asus Reportedly Halts Smartphone Launches ‘Temporarily’ to Focus on AI Robots, Smart Glasses
New Solid-State Freezer Could Replace Climate-Harming Refrigerants