சாம்சங் தனது 'F' சீரிஸில் புதிய Galaxy F70e 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் லான்ச் செய்துள்ளது.
Photo Credit: Samsung
Galaxy F70e 5G இந்தியாவில் அறிமுகம்; 6.7-இன்ச் 120Hz, 6000mAh, Dimensity 6300, 6ஆண்டு அப்டேட்கள்
இன்னைக்கு சாம்சங் (Samsung) ஒரு அதிரடியான பட்ஜெட் போனை இந்தியால லான்ச் பண்ணிருக்காங்க. சாம்சங்கோட 'F' சீரிஸ்னாலே பேட்டரிக்கும், பெர்பார்மன்ஸ்க்கும் பேர்போனதுன்னு நமக்கு தெரியும். அந்த வரிசையில இன்னைக்கு (பிப்ரவரி 9, 2026) அறிமுகமாகியிருக்கிற போன் தான் Samsung Galaxy F70e 5G. பட்ஜெட் விலையில ஒரு 5G போன், அதுவும் 6 வருஷம் அப்டேட்டோட கிடைக்குதுன்னா சும்மாவா? வாங்க இதோட முழு ஜாதகத்தையும் பார்ப்போம்.
இந்த போன் ரெண்டு வேரியண்ட்ல வருது:
● 4GB + 128GB: இதோட ஒரிஜினல் விலை ரூ. 12,999. ஆனா அறிமுக கால வங்கி சலுகைகளோட (Bank Offers) நீங்க ரூ. 11,999-க்கே வாங்கிடலாம்.
● 6GB + 128GB: இதோட விலை ரூ. 14,999. இதையும் ஆஃபர்ல ரூ. 13,999-க்கு வாங்க முடியும். இது பிப்ரவரி 17 முதல் Flipkart, Samsung.com மற்றும் ரீடைல் கடைகள்ல விற்பனைக்கு வருது.
பட்ஜெட் போன் தானேன்னு டிசைன்ல சாம்சங் குறை வைக்கல. இதோட பின்னாடி பக்கம் 'Vegan Leather' பினிஷ் கொடுத்திருக்காங்க. இதனால போனை கையில பிடிக்கும்போது ஒரு பிரீமியமான ஃபீல் கிடைக்கும். Limelight Green மற்றும் Spotlight Blue என ரெண்டு கலர்ல இது கிடைக்குது. அதுமட்டும் இல்லாம, தூசி மற்றும் தண்ணி சிதறல்களை தாங்குறதுக்காக IP54 ரேட்டிங்கும் இதுல இருக்கு.
இந்த போனோட மெயின் ஹைலைட்டே இதோட 6000mAh பேட்டரி தான். போன வருஷம் வந்த மாடலை விட இது 20% பெரியது. ஒரு தடவை சார்ஜ் போட்டா ரெண்டு நாளைக்கு கவலையே இல்லைன்னு சாம்சங் சொல்லுறாங்க. கூடவே 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு (ஆனா பாக்ஸ்ல சார்ஜர் இருக்காது மக்களே!).
டிஸ்ப்ளேனு பார்த்தா, 6.7 இன்ச் HD+ LCD ஸ்கிரீன் இருக்கு. இதுல 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்திருக்கிறது ஒரு பெரிய பிளஸ். பட்ஜெட் போன்ல இவ்வளவு ஸ்மூத்தான ஸ்க்ரோலிங் கிடைக்கிறது சூப்பர் விஷயம். 800 nits பிரைட்னஸ் இருக்குறதால வெளிய வெயில்ல கூட டிஸ்ப்ளே ஓரளவுக்கு பளிச்சுன்னு தெரியும்.
பின்னாடி பக்கம் 50MP மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார்னு ரெண்டு கேமராக்கள் இருக்கு. பகல் நேரத்துல போட்டோஸ் நல்லாவே வரும். முக்கியமா இதுல இருக்குற Night Mode லோ-லைட் போட்டோஸை பிரைட்டா எடுத்து கொடுக்கும்னு சாம்சங் சொல்லிருக்காங்க. முன்னாடி செல்ஃபி எடுக்க 8MP கேமரா இருக்கு.
இதுல MediaTek Dimensity 6300 சிப்செட் இருக்கு. இது ஒரு டீசண்டான 5G சிப்செட். கேமிங் ரொம்ப ஹெவியா விளையாட முடியாதுன்னாலும், டெய்லி யூஸ்க்கு செம ஸ்மூத்தா இருக்கும். இங்கதான் சாம்சங் ஒரு பெரிய ட்விஸ்ட் வச்சிருக்காங்க. இந்த போனுக்கு 6 வருட OS அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதாவது, நீங்க இப்போ வாங்குனா 2032 வரைக்கும் இந்த போன் லேட்டஸ்ட்டா இருக்கும். இது இந்த பட்ஜெட்ல மத்த எந்த பிராண்டும் தராத ஒரு விஷயம்.
உங்களுக்கு பட்ஜெட் ₹12,000-க்குள்ள இருக்கணும், ஆனா போன் ரொம்ப வருஷம் உழைக்கணும், பேட்டரி சார்ஜ் நிக்கணும்னு நினைச்சீங்கன்னா, இந்த Galaxy F70e 5G ஒரு பெஸ்ட் சாய்ஸ்.சோ மக்களே, இந்த சாம்சங் போன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இதே விலையில வர்ற மத்த போன்களை விட இது பெட்டரா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999