Xiaomi 17 மற்றும் 17 Ultra ஸ்மார்ட்போன்களின் குளோபல் வேரியண்ட் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளன. இதன் கேமரா மற்றும் பேட்டரி ரகசியங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Pro 6,300mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இன்னைக்கு நாம பார்க்கப்போறது ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு மிகப்பெரிய புயலை கிளப்பப்போற செய்தியை பத்திதான். அதுதான் Xiaomi 17 மற்றும் Xiaomi 17 Ultra. ஷாவ்மி நிறுவனம் ஐபோன் 17 சீரிஸை நேருக்கு நேர் மோதுறதுக்காகவே 16-வது சீரிஸை ஸ்கிப் பண்ணிட்டு நேரடியா 17-வது சீரிஸை சீனாவில ரிலீஸ் பண்ணினாங்க. இப்போ இந்த போன்களோட குளோபல் வேரியண்ட் (Global Variant) எப்படி இருக்கப்போகுதுங்கிற "ரெண்டர்ஸ்" இப்போ இன்டர்நெட்ல கசிஞ்சு வைரல் ஆகிட்டு இருக்கு. லீக்கான ரெண்டர்ஸை பார்த்தா, Xiaomi 17 Ultra ஒரு பக்கா 'Flat Display' போனா வரப்போகுது. இதுக்கு முன்னாடி இருந்த கர்வ் டிசைனை விட்டுட்டு, இப்போ இருக்குற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி கிளீன் மற்றும் மினிமலிஸ்டிக் லுக்ல இருக்கு. போனோட பின்னாடி இருக்குற அந்த பெரிய ரவுண்ட் கேமரா மாட்யூல் தான் இதோட அடையாளமே. இதுல இருக்கப்போற "Leica" பிராண்டிங் போட்டோகிராபி லவர்ஸ்க்கு ஒரு பெரிய ட்ரீட்.
Xiaomi 17 Ultra-வோட கேமரா செட்டப் தான் இப்போ பேசுபொருளா இருக்கு.
● Main Camera: 1-இன்ச் கொண்ட 50MP 'Light Hunter' சென்சார்.
● Periscope Lens: மலைக்க வைக்கும் 200MP Leica APO ஜூம் லென்ஸ்!
● Ultrawide: 50MP லென்ஸ். இந்த 200MP பெரிஸ்கோப் கேமரா மூலமா நீங்க தூரத்துல
இருக்குற பொருளை கூட ஒரு துகள் குறையாம துல்லியமா போட்டோ எடுக்கலாம். ஜூம் பண்ணும்போது குவாலிட்டி குறையாம இருக்க "Continuos Optical Zoom" தொழில்நுட்பத்தையும் இதுல ஷாவ்மி கொண்டு வந்திருக்காங்க.
இந்த ரெண்டு போன்களுமே குவால்காமோட லேட்டஸ்ட் மற்றும் பவர்ஃபுல் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மூலமா இயங்கப்போகுது. 12GB மற்றும் 16GB RAM ஆப்ஷன்கள் இதுல இருக்கு. கேமிங் விளையாடுறவங்களுக்கு இந்த போன் ஒரு சொர்க்கம்ன்னே சொல்லலாம். இதுல இருக்குற 'Ring Cold Pump' கூலிங் சிஸ்டம் போனை ஹீட் ஆகாம பாத்துக்கும்.
சீனாவுல ரிலீஸ் ஆன மாடல்ல 6,800mAh பேட்டரி இருந்துச்சு. ஆனா குளோபல் வேரியண்ட்ல பேட்டரி அளவு கொஞ்சம் குறைக்கப்பட்டு 6,000mAh-ஆ இருக்கும்னு லீக்ஸ் சொல்லுது. இருந்தாலும் இது சாம்சங் மற்றும் ஐபோனை விட ரொம்ப அதிகம் தான். கூடவே 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கு.
வரும் மார்ச் 2026 தொடக்கத்துல பார்சிலோனாவுல நடக்கப்போற MWC (Mobile World Congress) நிகழ்வுல தான் இந்த போன்கள் உலக சந்தைக்கு அறிமுகமாகும்.
இந்தியாவிலும் அதே மார்ச் மாசம் லான்ச் ஆகும்னு எதிர்பார்க்கப்படுது. விலையை பொறுத்தவரை Xiaomi 17 Ultra சுமார் ரூ. 1,30,000 முதல் ரூ. 1,45,000 வரை இருக்கலாம்.
உங்களுக்கு ஒரு ஸ்மார்ட்போன் கேமரா வேணாம், ஒரு புரொபஷனல் கேமராவே உங்க கையில இருக்கணும்னு நினைக்கிறவங்க தாராளமா இந்த Ultra மாடலுக்கு வெயிட் பண்ணலாம். குறிப்பா அந்த 200MP ஜூம் கேமராவை டெஸ்ட் பண்ணவே ஒரு கூட்டம் வெயிட்டிங். சோ மக்களே, ஷாவ்மியோட இந்த 17 சீரிஸ் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? சாம்சங் S26 Ultra-வை விட இது பெட்டரா இருக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile