Samsung Galaxy S25 Ultra 5G ஸ்மார்ட்போனின் விலை தற்போது இந்திய சந்தையில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. Galaxy S26 Ultra அறிமுகமாக உள்ள நிலையில், இந்த போனை குறைந்த விலையில் வாங்குவது எப்படி? முழு விவரம் உள்ளே.
Photo Credit: Samsung
Galaxy S25 Ultra விலை குறைவு; Amazon-ல் ரூ.18,599 தள்ளுபடி, ரூ.35,950 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் இந்தியா
இன்னைக்கு நாம ஒரு செம "Heavy" அப்டேட்டை பத்திதான் பார்க்கப்போறோம். நீங்க ஒரு சாம்சங் ரசிகரா? இல்லனா ஒரு அல்டிமேட் ஆண்ட்ராய்டு போன் வாங்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு ஜாக்பாட் அடிச்சிருக்கு. சாம்சங்கோட தற்போதைய ராஜாவான Samsung Galaxy S25 Ultra 5G-யோட விலை இப்போ அமேசான்ல (Amazon) யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மளமளன்னு குறைஞ்சிருக்கு. சாம்சங் வழக்கமா ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி மாசம் தங்களோட புது 'S' சீரிஸை அறிமுகம் பண்ணுவாங்க. அந்த வகையில வர்ற பிப்ரவரி 25, 2026 அன்னைக்கு Galaxy S26 Ultra லான்ச் ஆகப்போகுதுன்னு செய்திகள் வந்துகிட்டு இருக்கு. இதனால, பழைய ஸ்டாக்கை கிளியர் பண்றதுக்காக, இப்போ இருக்குற S25 Ultra-வோட விலையை அமேசான் அதிரடியா குறைச்சிருக்காங்க.
இந்த போன் லான்ச் ஆனப்போ இதோட விலை ரூ. 1,29,999-ஆ இருந்துச்சு. ஆனா இப்போ அமேசான்ல இது வெறும் ரூ. 1,11,400-க்கு லிஸ்ட் செய்யப்பட்டிருக்கு. அதாவது நேரடியா ரூ. 18,599 தள்ளுபடி! இது போக, உங்ககிட்ட HDFC, Axis அல்லது OneCard கிரெடிட் கார்டு இருந்தா இன்னும் ஒரு ரூ. 1,500 வரைக்கும் உடனடித் தள்ளுபடி வாங்கலாம். அப்படி பார்த்தா, இதோட எஃபெக்டிவ் பிரைஸ் (Effective Price) சுமார் ரூ. 1,10,000 ரேஞ்சுக்கு வந்துடும்.
இது மட்டும் இல்லாம, உங்ககிட்ட ஒரு பழைய ஐபோனோ இல்ல பழைய சாம்சங் அல்ட்ரா போனோ இருந்தா, அதை எக்ஸ்சேஞ்ச் பண்ணி ரூ. 35,950 வரைக்கும் தள்ளுபடி வாங்கலாம்னு அமேசான் சொல்லுது. உங்க பழைய போன் நல்ல கண்டிஷன்ல இருந்தா, இந்த S25 Ultra-வை நீங்க ரூ. 80,000-85,000-க்குள்ளயே கூட வாங்கிடலாம்.
"அடுத்த மாசம் புது போன் வருதே, அதுக்காக வெயிட் பண்ணலாமே?" அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனா அதுக்கும் இதுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான்:
புதுசா வரப்போற S26 Ultra-வோட ஆரம்ப விலை கண்டிப்பா ரூ. 1.35 லட்சத்தை தாண்டிதான் இருக்கும். உங்களுக்கு பட்ஜெட் ஒரு கவலையா இருந்தா, ஆனா அந்த 'Ultra' அனுபவம் வேணும்னா, இப்போ கிடைக்குற இந்த ரூ. 18,500 தள்ளுபடி ஆஃபரை நீங்க தாராளமா பயன்படுத்திக்கலாம். சோ மக்களே, இந்த ஆஃபர் ஸ்டாக் இருக்குற வரைக்கும் தான் இருக்கும். இந்த டீல் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இதே விலையில iPhone 17 வாங்கலாமா இல்ல சாம்சங் S25 Ultra பெட்டரா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features