ஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ஜெட் டேப்லெட் வரிசையில் 5G வசதியுடன் கூடிய புதிய OnePlus Pad Go 2-வை அறிமுகம் செய்துள்ளது
Photo Credit: OnePlus
இந்தியாவில் OnePlus Pad Go 2 அறிமுகம் 10050mAh பேட்டரி 5G ஸ்டைலஸ் ஆதரவு உடன்
இன்னைக்கு டேப்லெட் மார்க்கெட்ல ஒரு பெரிய அதிர்வலைய கிளப்ப வந்திருக்கு OnePlus Pad Go 2. போன வருஷம் வந்த பேட் கோ-வோட அடுத்த வெர்ஷனான இதுல, ஏகப்பட்ட அப்டேட்களை ஒன்பிளஸ் அள்ளி வீசியிருக்காங்க. முதல்ல இதோட டிஸ்ப்ளே பத்தி பேசிடுவோம். இதுல ஒரு பிரம்மாண்டமான 12.1-இன்ச் 2.8K LCD டிஸ்ப்ளே இருக்கு. 120Hz ரிப்ரெஷ் ரேட் வசதியோட வர்றதுனால, கேமிங் விளையாடும்போதும் சரி, படம் பார்க்கும்போதும் சரி, செம ஸ்மூத்தா இருக்கும். அதுமட்டும் இல்லாம 900 நிட்ஸ் பிரைட்னஸ் இருக்குறதால, வெளியில வெயில்ல வச்சு யூஸ் பண்ணாலும் ஸ்க்ரீன் நல்லாவே தெரியும்.
இதோட இன்ஜின் பார்த்தீங்கன்னா, MediaTek Dimensity 7300-Ultra சிப்செட். இது ஒரு 4nm ப்ராசஸர் அப்படிங்கறதால பெர்பார்மன்ஸ் வேற லெவல்ல இருக்கும். முக்கியமா, இந்த தடவை ஒன்பிளஸ் அவங்களோட கோ சீரிஸ்ல முதல் முறையா 5G வசதியை கொண்டு வந்திருக்காங்க. இனிமே நீங்க எங்க வேணாலும் 5G சிம் போட்டு ஹை-ஸ்பீடு இன்டர்நெட் யூஸ் பண்ணலாம்.
பேட்டரியை பொறுத்தவரை இது ஒரு ராட்சச பேட்டரினே சொல்லலாம். 10,050mAh பேட்டரி கொடுத்திருக்காங்க. ஒரு தடவை சார்ஜ் போட்டா 15 மணி நேரம் தொடர்ந்து வீடியோ பார்க்கலாம், இல்லனா 60 நாள் வரைக்கும் ஸ்டாண்ட்பைல இருக்கும்னு சொல்றாங்க. கூடவே 33W சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கு.
கேமராவுல முன்னாடி ஒரு 8MP, பின்னாடி ஒரு 8MP இருக்கு. வீடியோ கால்ஸ்க்கு இது ரொம்பவே போதும். ஆடியோவுக்கு நாலு ஸ்பீக்கர்ஸ் இருக்கு, அதனால சவுண்ட் குவாலிட்டி தியேட்டர் மாதிரி இருக்கும். இதுல லேட்டஸ்ட் OxygenOS 16 (ஆண்ட்ராய்டு 16) சாஃப்ட்வேர் இருக்கு. இதுல இருக்குற 'Open Canvas' பீச்சர் மூலமா நீங்க ஒரே நேரத்துல மூணு ஆப்ஸை ரொம்ப ஈஸியா மல்டி-டாஸ்கிங் பண்ண முடியும்.
லேவண்டர் ட்ரிஃப்ட் (Lavender Drift) மற்றும் ஷேடோ பிளாக் (Shadow Black) கலர்கள்ல இது கிடைக்குது. அறிமுக சலுகையா ₹3,999 மதிப்புள்ள 'ஸ்டைலஸ்' பேனாவை குறிப்பிட்ட காலத்துக்கு ஃப்ரீயா தர்றாங்க. பட்ஜெட்ல ஒரு நல்ல 5G டேப்லெட் வேணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இத ட்ரை பண்ணலாம்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Poco M8 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More
Oppo Reno 15 Series 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More