Photo Credit: Twitter/ Sudhanshu Ambhore
Samsung Galaxy M31 அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது
வருகிற பிப்.25-ம் தேதி Samsung Galaxy M31 இந்தியாவில் அறிமுகமாக உள்ள நிலையில், இது குறித்தான சில முக்கியத்தகவல்கள் இணையதளத்தில் கசிந்திருக்கிறன. வடிவமைப்பு, நிறம், விலை சம்பந்தப்பட்ட முழு விவரக் குறிப்புகள் இந்த கசிவில் தெரியவந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதன்சு அம்போர் செய்த டிவிட்டில் குவாட் கேமரா அமைப்பு மற்றும் வாட்டர் டிராப் நாட்சை தவிர, டிஸ்பிளேவின் அடிப்பகுதியில் ஒரு சிறிய சின் காணப்படுகிறது மேலும் போனின் வலது விளிம்பில் வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக 15,999 என்று குறிப்பிடப்பட்டிருந்த விலையானது, தற்போது 15,000 ரூபாயாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த போனின் நிறங்கள் கருப்பு, நீலம் மற்றும் சிகப்பு போன்றவற்றில் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
கேமராக்களைப் பொறுத்தவரை Galaxy M31-ன் குவாட் கேமரா அமைப்பில் f/1.8 aperture கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா f/2.2 aperture கொண்ட 8 மெகாபிக்சல் wide-angle கேமரா f/2.2 aperture கொண்ட 5 மெகாபிக்சல் depth கேமரா மற்றும் f/2.4 aperture கொண்ட மற்றொரு 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறது. போனின் முன்புறத்தில் f/2.0 aperture கொண்ட 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கப்போகிறது. இந்த போன் 6,000mAh பேட்டரியை பேக் செய்ய முனைகிறது. இது டீஸர்கள் வழியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், Galaxy M31, 15W சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கும். சாதனம் 159.2x75.1x8.9mm அளவீட்டையும் சுமார் 191 கிராம் எடையையும் கொண்டதாகும்.
Samsung Galaxy M31-ன் வெளியீடு பிப்ரவரி 25 மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். இந்த போன் ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான One UI 2.0-ல் இயங்கும் என்றும் 4 ஜிபி 64 ஜிபி 6 ஜிபி 64 ஜிபி 6 ஜிபி 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி எனப் பல சேமிப்பக கட்டமைப்புகளில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்