கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடல் 19,499 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம் மாடல் 21,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கண்னைக் கவரும் டிசைனில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
சாம்சங் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் சாம்சங் கேலக்ஸி M31 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக அதே சீரிஸில் தற்போது புதிதாக கேலக்ஸி M31s என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது M31 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியன்டாக பார்க்கப்பட்டாலும் கூடுதலான சிறப்பம்சங்கள் பல இதில் உள்ளன.
முதல் விஷயமாக கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனின் தோற்றமே கண்ணைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. பளபளப்பான கிளாஸ்டிக் டெட்ரியல் கொண்டு பேனல் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது கண்ணாடியும் (Glass) பிளாஸ்டிக்கும் சேர்ந்த கலவையாகும்.
முக்கிய அம்சங்களாக கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரி, USB டைப் சி கேபிள், 25W சார்ஜர், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராயட்டு 10 இயங்குதளத்தில், ஆக்டாகோர் எக்ஸினோஸ் 9611 SoC பிராசசரில் கேலக்ஸி M31s இயங்குகிறது. இந்த பிராசசர் மட்டும்தான் மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும் போது சற்றுக் குறைவான வேகம் கொண்டதாகும்.
கேமராவைப் பொறுத்தவரையில் இதுவரையில் மற்ற சாம்சங் போன்களில், சாம்சங் சென்சாருடன் கூடிய கேமராதான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் சோனி IMX682 சென்சாருடன் பிரைமரி கேமரா வருகிறது.
பின்பக்கத்தில் எல் வடிவில் நான்கு கேமராக்கள் (குவாட் கேமரா) வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம், பின்புறம் இரண்டிலும் 4K அளவிலான வீடியோக்கள் எடுக்க முடியும். குறிப்பாக வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே போட்டோவும் எடுக்க முடியும்.
விலை:
கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடல் 19,499 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம் மாடல் 21,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் இந்த கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Starts Warning Users About Chats From Unknown Numbers
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Camera Upgrades Said to Result in Thicker Rear Camera Module, Larger Lenses
Grand Theft Auto 6 Price, Editions Revealed; Pre-Orders Begin at Midnight on June 25