இந்தியாவில் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடல் 19,499 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம் மாடல் 21,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
Samsung Galaxy M31s ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது
சாம்சங் M31s ஸ்மார்ட்போன் ஸ்டாக் தீர்ந்த நிலையில், தற்போது மீண்டுமொரு முறை விற்பனைக்கு வந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் கடந்த மாதம் இறுதியில் கேலக்ஸி M31s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.இது M31 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக அமேசான் பிரைம் டே சேலில் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு அதிகமக்கள் விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால், ஸ்டாக் இல்லாததால், பிரைம் டே சேலுக்குப் பிறகு கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது சாம்சங்கின் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடல் 19,499 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம் மாடல் 21,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்களாக கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரி, USB டைப் சி கேபிள், 25W சார்ஜர், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராயட்டு 10 இயங்குதளத்தில், ஆக்டாகோர் எக்ஸினோஸ் 9611 SoC பிராசசரில் கேலக்ஸி M31s இயங்குகிறது. இந்த பிராசசர் மட்டும்தான் மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும் போது சற்றுக் குறைவான வேகம் கொண்டதாகும்.
கேமராவைப் பொறுத்தவரையில் இதுவரையில் மற்ற சாம்சங் போன்களில், சாம்சங் சென்சாருடன் கூடிய கேமராதான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் சோனி IMX682 சென்சாருடன் பிரைமரி கேமரா வருகிறது.
பின்பக்கத்தில் எல் வடிவில் நான்கு கேமராக்கள் (குவாட் கேமரா) வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம், பின்புறம் இரண்டிலும் 4K அளவிலான வீடியோக்கள் எடுக்க முடியும். குறிப்பாக வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே போட்டோவும் எடுக்க முடியும்.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Realme 16 5G With 7,000mAh Battery, MediaTek Dimensity 6400 Turbo SoC Launched: Price, Features