சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M51 என்ற புத்தம் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்து வரும் நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன.
சாம்சங் M51 ஸ்மார்ட்போனில் 7,000mAh பேட்டரி, 15W சார்ஜர் இருக்கலாம்.
சாம்சங் நிறுவனம் புதிதாக கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போனை தயாரித்து வருகிறது. இதனால், கேலக்ஸி M51 தொடர்பான செய்திகள், வதந்திகள் ஆன்லைனில் வலம் வந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், தற்போது கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க கேமராவில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சாம்மொபைல் என்ற இணையதளத்தில் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் உள்ள சில சிறப்பம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சலுடன் பிரைமரி கேமராவும், 12 மெகா பிக்சலுடன் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கேமராக்களைத் தவிர, அதற்கு ஆதரவாக மேக்ரோ லென்ஸ், டெப்த் லென்ஸ் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. ஆக மொத்தம் குவாட் கேமரா (4 கேமராக்கள்) வசதியுடன் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் வரலாம். ஏற்கனவே, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனிலும் இதேபோன்றுதான் கேமரா அம்சங்கள் இருந்தன.
கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவில் செயற்கை நுண்ணறிவுடன் சிங்கிள் டேக் வசதி உள்ளது. இதன் மூலம், 3 முதல் 10 நொடிகளுக்குள் 14 விதமான போட்டோக்கள், வீடியோக்களை எடுக்க முடியும். மேலும், பேட்டரி சக்தி இதுவரையில் இல்லாத வகையில் அபரிமிதமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 7,000mAh சக்தி கொண்ட பேட்டரி இருக்கலாம் என்றும், அதற்கு 15W சார்ஜர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் 6,800mAh பேட்டரி இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், தற்போது கூடுதல் சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 675 SoC பிராசசர், 8ஜிபி ரேம், ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளும் இந்த போனில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 15 Series 5G, Oppo Pad 5, and Oppo Enco Buds 3 Pro+ Sale in India Begins Today: Price, Offers