சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது, அது எப்படி இருக்கும் என்பது குறித்து இஷான் அகர்வால் என்ற டெக்வல்லுநர் டுவீட் செய்துள்ளார்.
Photo Credit: Amazon
Samsung Galaxy M31s பின்புறத்தில் நான்கு கேமராக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சாம்சங் தரப்பில் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 31 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில், இதன் கலர், வேரியன்ட், சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
சாம்சங் தரப்பில் இந்தாண்டு கேலக்ஸி M31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இது வரும் ஜூலை 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சாம்சங் வாடிக்கையாளர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது, அது எப்படி இருக்கும் என்பது குறித்து இஷான் அகர்வால் என்ற டெக் வல்லுநர் டுவீட் செய்துள்ளார். அதன்படி, கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளே, அமோலேட் திரை, பின்புறத்தில் நான்கு கேமராக்கள், 6,000 mAh பேட்டரி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 64MP பிரைமரி கேமரா, 12MP செகன்டரி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா, 5MP டெப்த் சென்சார் கேமரா, மற்றொரு 5MP டெப்த் கேமரா ஆகியவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்புறத்தில் உள்ள செல்ஃபி கேமரா 32 மெகா பிக்சலுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 9611 பிராசசர், USB டைப் சி போர்ட், 25 வாட் சார்ஜர், 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரியுடன் அறிமுகமாகலாம். 6GB ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியன்டுகளில் கேலக்ஸி M31s கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதன் விலை எவ்வளவு என்பது இதுவரையில் கணிக்கப்படவே இல்லை. அமேசானில் அடுத்த மாதம் பிரைம் டே சேல் வருகிறது. அந்த சேலில் சாம்சங் கேலக்ஸி M31s ஆஃபரில் கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர்.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Apple Confirms Second Store in Mumbai Will Open 'Soon'; Reportedly Leases Space for Corporate Office in Chennai