Infinix Note 40 5G செல்போனுக்கு இந்தியாவில் எகிறும் மார்க்கெட்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2024 14:40 IST
ஹைலைட்ஸ்
  • AMOLED டிஸ்பிளே உடன் Wireless Charging வசதி உள்ளது
  • பட்ஜெட் விலையில் அறிமுகமான சூப்பர் செல்போன்
  • பரிமாணம் 7020 செயலி

Infinix Note 40 5G இந்திய செல்போன் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் முதல் முறையாக 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் Wireless Charging வழங்கும் ஒரே செல்போன் இதுதான். இதுவரை பிரீமியம் போன்களில் மட்டும் கிடைத்த இந்த அம்சம் இனி பட்ஜெட் போன்களுக்கும் கிடைக்கப்போகிறது.  Infinix Note 40 5G இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட Infinix Note 40 Pro 5G மற்றும் Infinix Note Pro+ 4G வரிசையில் இந்த ஸ்மார்ட்போன் இணைகிறது. 

Infinix Note 40 5G செல்போனை சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர். இதன் விலை இந்திய மதிப்பில் 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு செம்ம வொர்த்தான 5ஜி நெட்வொர்க் வசதியுடன் வந்துள்ளது. வங்கி சலுகைகள் இருந்தால் 17,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. எக்ஸ்சேஜ் வசதி மூலம் இன்னும் கூடுதல் சலுகையாக 15999 என்கிற விலையில் வாங்கலாம். Flipkart ஆன்லைன் தளம் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட கால சலுகையாக 1,999 ரூபாய் மதிப்புள்ள MagPad இவலசமாக பெறலாம்.

6.78  இன்ச் அளவு கொண்ட FHD+ LTPS AMOLED டிஸ்பிளே இருக்கு. 580 Peak brightness உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உள்ளது. மின்னல் வேகத்தில் ஸ்கிரீன் இயங்கும். MediaTek Dimensity 7020 Chipset உடன் 8GB RAM மற்றும் 256 GB Storage இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் OIS டெக்னாலஜி கொண்ட 108MP கேமராவுடன் இரண்டு 2MP கேமரா ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 45W வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 20W மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களும் இருக்கிறது.

Active Halo lighting design கான்செப்ட் மூலம் தங்க நிறத்தில் வெளிவரவுள்ளது. இது போன்ற வசதி கொண்ட செல்போன் பெரிய நிறுவனங்கள் தயாரிப்பில் 50 ஆயிரத்துக்கு மேல் வரும். ஆனால் 20 ஆயிரத்தும் கீழ் இதன் விலை இருப்பதால் சிறந்த பட்ஜெட் செல்போன் என்ற பெருமையை தட்டிச்செல்கிறது Infinix Note 40 5G.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mobile phone, Infinix Note 40 Pro 5G, Infinix Note, Infinix 5G
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  2. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  3. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  4. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
  5. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  6. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  7. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  9. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  10. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.