Photo Credit: Samsung
விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி மாடலின் S24 FE எடிசன் விரைவில் வெளியாக இருக்கிறது. பல எதிர்பாராத அம்சங்கள் Samsung Galaxy S24 FE மாடலில் இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 6.65 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.
இந்தியாவில் Samsung Galaxy S24 FE மாடல் ரூபாய் 59,999க்கு அறிமுகம் ஆகும் என தெரிகிறது. 8 ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.65 இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்பிளே இருக்கலாம். பவர்புலான Snapdragon 8 Gen 3 சிப்செட் இருப்பதால் கேமிங், வீடியோ எடிட்டிங் என அனைத்து பயன்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும்.
இதுதவிர, Samsung Galaxy S24 FE வேரியண்ட் Exynos 2400 SoC சிப் மூலம் இயங்கும் என தெரிகிறது. இதனால் வேகம் பக்காவாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் உள்ளதை போலவே 4500 எம்ஏஎச் பேட்டரி இருக்கலாம் என தெரிகிறது. இது ஒருநாள் முழுக்க தாக்குபிடிக்க உதவும். கேமராக்கள் வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
கூடுதலாக டிரிபிள் ரியர் கேமரா யூனிட், அதில் OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, முன்பக்கத்தில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்