டெல்லியில் நடைபெற்று வரும் AI Impact Summit 2026-ல், ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளது
Photo Credit: Unsplash
OpenAI for India புதிய திட்டம் ஐஐடி டெல்லி ஐஐஎம் அகமதாபாத் இணைப்பு அறிவிப்பு அதிகாரம்
இன்னைக்கு நம்ம இந்தியக் கல்வித் துறையில ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நடந்திருக்கு. உலகத்தையே ஆட்டிப்படைச்சுட்டு இருக்கிற OpenAI (ChatGPT உருவாக்கிய நிறுவனம்), இப்போ அதிகாரப்பூர்வமா நம்ம நாட்டு மாணவர்களோட கையை பிடிச்சிருக்காங்க. டெல்லியில நடக்குற AI Impact Summit 2026-ல ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் (Sam Altman) இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுருக்காரு.
முதற்கட்டமா, ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியாவின் மிக முக்கியமான 7 கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செஞ்சிருக்காங்க. அதுல:
● ஐஐடி டெல்லி (IIT Delhi)
● ஐஐஎம் அகமதாபாத் (IIM Ahmedabad)
● எய்ம்ஸ் டெல்லி (AIIMS New Delhi)
● மணிப்பால் உயர் கல்வி நிறுவனம் (MAHE)
● பிர்ல் அகாடமி (Pearl Academy) போன்ற டாப் காலேஜ்கள் இருக்கு. இதுமட்டும் இல்லாம, கிட்டத்தட்ட 1,00,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்தத் திட்டம் நேரடியா போய் சேரப்போகுது.
வெறுமனே ஒரு சாட்பாட் யூஸ் பண்றதோட இது நிக்காதுங்க. இதோட மெயின் மேட்டரே வேற!
காலேஜ் போறவங்களுக்கு மட்டும்தான் இந்த சான்ஸான்னு கேட்டா, இல்லவே இல்லை! நம்ம ஊரு ஃபேமஸ் ஆன்லைன் கல்வி நிறுவனங்களான PhysicsWallah, upGrad மற்றும் HCL GUVI ஆகிய தளங்களோடவும் ஓபன் ஏஐ கை கோர்த்திருக்காங்க. இதனால வேலைக்கு போறவங்க இல்லனா வீட்ல இருந்து படிக்கிறவங்களும் தரமான ஏஐ கோர்ஸ்களை கத்துக்க முடியும்.
இந்தியாவுல இப்போ 10 கோடிக்கும் அதிகமான சாட்ஜிபிடி பயனர்கள் இருக்காங்க. அமெரிக்காவுக்கு அப்புறம் இதுதான் உலகத்திலேயே பெரிய மார்க்கெட். அதனால, இந்தியாவோட திறமையை இன்னும் மெருகேத்தி, உலகத்துக்கே ஒரு ஏஐ லீடரா மாத்தணும்ங்கிறதுதான் சாம் ஆல்ட்மேனோட பிளான். இதனால வர்றப்போற காலத்துல வேலைவாய்ப்புகள்ல இந்திய மாணவர்களுக்கு மிகப்பெரிய மவுசு இருக்கும்.
இந்த சமிட்ல கூகுளும் நிறைய அறிவிப்புகளை விட்டுருக்காங்க. ஆனா ஓபன் ஏஐ நேரடியாகக் கல்வி நிறுவனங்களுக்குள்ள இறங்கி வேலை செய்றது ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கு. 2030-குள்ள நம்ம வேலை செய்ற முறையே 40% மாறிடும்னு சொல்லப்படுற நிலையில, இந்த அறிவிப்பு நம்ம மாணவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். படிப்புங்கிறது இனி புக்க பார்த்து மட்டும் இல்லாம, ஏஐ கூட சேர்ந்து வேலை செய்ற ஒரு அனுபவமா மாறப்போகுது. நீங்க இந்த காலேஜ்கள்ல படிக்கிறவரா இருந்தா, இப்போவே இந்த வசதிகளைப் பயன்படுத்த ரெடி ஆயிக்கோங்க. என்ன நண்பர்களே, இந்த 'OpenAI for India' பிளான் உங்களுக்கு பிடிச்சிருக்கா? இனி இந்திய மாணவர்கள் உலகத்தையே கலக்குவாங்களா? உங்க கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo V80 FE Reportedly Spotted on BIS Certification Website, India Launch Seems Imminent
Airtel’s New Recharges in India Announced: Rs. 185, Rs. 203 and Rs. 206 Voice-Only Plans Details