Motorola Razr 50 குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை கொண்டுள்ளது.
Photo Credit: Motorola
லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா பிராண்டிலிருந்து அடுத்து வெளியாகும் இருக்கும் செல்போன் மாடல்தான் Motorola Razr 50. இது சாம்சங் ஹையர் எண்ட் செல்போன்களுக்கு செம்ம போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாம்சங் டாப் மாடல் போன்களுக்கு நிர்ணயித்த விலையை விட, Motorola Razr 50 விலை மிக குறைவாக இருக்கும்.
Motorola Razr 50 Ultra ஆனது Qualcomm Snapdragon 8s Gen 3 மற்றும் 4,000mAH பேட்டரி பேக்அப்பை கொண்டிருக்கும். இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கலாம் என தெரிகிறது. மோட்டோரோலாவின் ஹலோ UI உடன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்பட ஆர்வலர்களுக்காக Motorola Razr 50 போனில் 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா அமைப்பு இடம்பெறலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பு தொடர்பான அனைத்து தேவைகளையும் கையாள 32எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 3.6 இன்ச் கவர் டிஸ்ப்ளேவுடன், 6.9 இன்ச் ஓஎல்இடி பேனலைக் கொண்டிருக்கும். MediaTek Dimensity 7300X சிப்செட் மூலம் செல்போன் வசதிகள் இயக்கப்படும். 33W சார்ஜிங் வேகத்துடன் இருக்கலாம் என தெரிகிறது.
இந்த மாதம் சீனாவில் இந்த போன் அறிமுகமாகும் நிலையில், ஜூலை மாதத்தில் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலாவின் Razr 40 Ultra முதலில் ரூ.89,999 விலையில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. ஆனால் ரூ.58,000 என்றும் ஒரு சில பக்கங்களில் வதந்தி பரவுகிறது. இந்த மாத இறுதிக்குள் விலை உறுதியாக தெரிந்துவிடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Clair Obscur: Expedition 33 Wins Game of the Year, Sweeps The Game Awards 2025 With 9 Wins: Full Winners' List
Huawei Mate X7 With Kirin 9030 Pro Chip, 8-Inch OLED Inner Display Launched Globally: Price, Specifications