Samsung Galaxy Flip 6 சந்தையில் உள்ள மற்ற சாம்சங் செல்போன்களை விட அதிக விலைக்கு வர உள்ளது
Photo Credit: Tomsguide
சாம்சங் நிறுவனம் தரப்பில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை செல்போன்களான மடிக்க கூடிய FLIP சீரியஸ் மீண்டும் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் Samsung Galaxy Flip 6 சீரியஸ் செல்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இது டாப் கிளாஸ் குளவாலிட்டி உடைய ஹார்டுவேர் சிப்கள் சேர்க்கப்பட்டு இதுவரை மார்க்கெட்டில் உள்ள சாம்சங் செல்போன்களில் அதிக விலை உடைய செல்போனாக வர இருக்கிறது.
நமக்கு கிடைத்த தகவல்களின்படி, அடுத்த கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் Samsung Galaxy Flip 6 வெளியிடப்படும். இந்த நிகழ்வு ஜூலை 10, 2024 அன்று பாரிஸில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வரை சாம்சங் மட்டுமே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், இப்போது ஒன்பிளஸ் , ஒப்போ ,ஹானர் போன்ற சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிக்கு வந்துவிட்டது. இதை சமாளிக்க வரவிருக்கும் Samsung Galaxy Z Flip 6 சீரியஸ் அதிக அம்சங்கள் மற்றும் புதுமையான பல அப்டேட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக 6 ஆறு வெவ்வேறு வண்ணங்களில் வரக்கூடும் என தெரிகிறது. Galaxy Z Flip 6 ஆனது 120Hz புதுப்பிப்பு வேகம் இருக்கும். 7.6 இன்ச் FHD+ தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளே இருக்கும். Galaxy Z Flip 5 உடன் ஒப்பிடும் போது அதிக பிரகாசத்துடன் இருக்கலாம். Snapdragon 8 Gen 3 பிராசஸர் இருப்பதால் மிக வேகமாக இயங்க கூடியதாக இருக்கும். குறைந்தது 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தை வழங்க வாய்ப்புள்ளது. டாப் மாடல்களில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி சேமிப்பகம் இருக்கலாம். 4,400 mAh பேட்டரி பவருடன் இருக்கும். IPX8 தர மதிப்பை பெற்று இருப்பதால் தண்ணீரில் பட்டால் எதுவும் ஆகாது என தெரியவருகிறது.
50 MP வைட்-ஆங்கிள் கேமரா, 12 MP அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 10 MP 3x டெலிஃபோட்டோ லென்ஸ், டிஸ்ப்ளேவில் மற்றொரு 10 எம்பி செல்ஃபி கேமரா இருக்கலாம். இயங்குதளத்தை பொருத்தவரையில் Galaxy AI அம்சங்களுடன் Android 14 அடிப்படையிலான OneUI 6.1 இருக்கும். Galaxy S24 தொடரைப் போலவே ஏழு ஆண்டுகள் வரை சாப்ட்வேர் சப்போர்ட் இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket