இதுவரை படுசீக்ரெட்டாக இருந்த OnePlus Ace 3 Pro செல்போன் மாடல் பற்றிய தகவல் இப்போது கசிந்துள்ளது. வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது. OnePlus நிறுவனத்தின் சமீபத்திய செல்போன்களை போல இல்லாமல் Ace 3 Pro கேமரா பேனால் உடன் இணைக்கப்படவில்லை. 1.5K அளவுக்கு தெளிவாக இருக்கும் வகையில் முன்பக்கத்தில் வளைந்த விளிம்புகளை கொண்ட OLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.
நான்கு கேமராக்கள் வட்ட வடிவிலான அமைப்பின் மீது பொருத்தப்பட்டுள்ளது. இது பார்க்க ஸ்டைலாலவும், ரிச் லுக் கொடுக்கும் வகையிலும் இருக்கிறது. OnePlus Ace 3 Pro கண்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் என்று சீன செய்திகள் தெரிவிக்கின்றன. காட்சி தரம், டிஸ்பிளே பிரகாசம், ஸ்கிரீன் ஆயுட்காலம் மற்றும் மென்மை ஆகியவற்றில் மேம்பாடுகளை கொண்டுள்ளது, இது DisplayMate A+ மதிப்பீட்டை பெற்றுள்ளது. Snapdragon 8 Gen 3 சிப் பொருத்தப்பட்டிருக்கும். செல்போனின் இடது பக்கத்தில் ஒரு எச்சரிக்கை ஸ்லைடர் இருப்பதையும், வலதுபுறத்தில் சவுண்ட் மற்றும் பவர் பொத்தான்கள் இருப்பதையும் போட்டோவில் காண முடிகிறது.
OnePlus Ace 3 Pro ஆனது 100W சார்ஜிங் கொண்ட 6,100mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் உறுதியான தகவல் இல்லை. 16 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1 TB UFS 4.0 சேமிப்பகத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் முன் பக்க கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 27 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகும் திறன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
டூயல் வீடியோ ரெகார்டிங்,கன்டினியஸ் ஷூட்டிங், 20 எக்ஸ் டிஜிட்டல் ஜூம், ஆட்டோ ஃப்ளாஷ், முகம் கண்டறிதல் வசதி கூடுதலாக உள்ளது. அட்ரினோ 740 கிராபிக்ஸ் இருப்பதால் கேமிங், வீடியோ எடிட்டிங் கூட இதில் சிரமம் இல்லாமல் செய்ய முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்