AMOLED டிஸ்பிளே உடன் Wireless Charging வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் போனாக Infinix Note 40 மாறப்போகிறது.
Photo Credit: Infinix
Infinix Note 40 5G இந்த செல்போன் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் முதல் முறையாக 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் Wireless Charging வழங்கும் ஒரே செல்போன் இதுதான். இதுவரை பிரீமியம் போன்களில் மட்டும் கிடைத்த இந்த அம்சம் இனி பட்ஜெட் போன்களுக்கும் கிடைக்கப்போகிறது.
Infinix Note 40 5G செல்போனை சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர். இதன் விலை இந்திய மதிப்பில் 19,900 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விலைக்கு செம்ம வொர்த். 5ஜி நெட்வொர்க் வசதியுடன் வருகிறது. 6.78 இன்ச் அளவு கொண்ட FHD+ LTPS AMOLED டிஸ்பிளே இருக்கு. 580 Peak brightness உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உள்ளது. மின்னல் வேகத்தில் ஸ்கிரீன் இயங்கும். MediaTek Dimensity 7020 Chipset உடன் 8GB RAM மற்றும் 256 GB Storage இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் OIS டெக்னாலஜி கொண்ட 108MP கேமராவுடன் இரண்டு 2MP கேமரா ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 45W வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 20W மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களும் இருக்கிறது.
Active Halo lighting design கான்செப்ட் மூலம் தங்க நிறத்தில் வெளிவரவுள்ளது. இது போன்ற வசதி கொண்ட செல்போன் பெரிய நிறுவனங்கள் தயாரிப்பில் 50 ஆயிரத்துக்கு மேல் வரும். ஆனால் 20 ஆயிரத்தும் கீழ் இதன் விலை இருப்பதால் சிறந்த பட்ஜெட் செல்போன் என்ற பெருமையை தட்டிச்செல்கிறது Infinix Note 40 5G.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Sarvam Maya Set for OTT Release on JioHotstar: All You Need to Know About Nivin Pauly’s Horror Comedy
Europa’s Hidden Ocean Could Be ‘Fed’ by Sinking Salted Ice; New Study Boosts Hopes for Alien Life