48 மெகா பிக்சல் கேமராவைக் கொண்ட ரெட்மி நோட் 7எஸ் மொபைல் போன், ரூ. 8,999-க்கு விற்பனைக்கு வரவுள்ளது. ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே சிறப்பு விற்பனையை முன்னிட்டு இந்த அதிரடி விலைக்குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விலைக்குறைப்பு செப்டம்பர் 29-ம்தேதி தொடங்கி அக்டோபர் 4-ம்தேதி வரை நடைமுறையில் இருக்கும். ஃப்ளிப்கார்ட் இணைய தளத்திற்கு சென்று ரூ. 8,999-க்கு ரெட்மி நோட் 7எஸ் மொபைலை பெற்றுக் கொள்ளலாம்.
ஃப்ளிப்கார்ட் இணைய தளத்தில் சிறப்பு உறுப்பினராக (Flipkart Plus Users) இருந்தால் நீங்கள் செப்டம்பர் 29-ம்தேதி இரவு 8-மணி முதல் மொபைலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் மறுநாளான செப்டம்பர் 30-ம்தேதிதான ஆஃபரில் மொபைல் வாங்க முடியும்.
ஆக்சிஸ் பேங்கின் டெபிட், கிரடிட் கார்டு வைத்திருப்போருக்கும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கும் 10 சதவீத தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது.
ரெட்மி நோட் 7 எஸ் மொபைலின் சிறப்பு அம்சங்கள்...
1. இரண்டு நானோ சிம்கள் கொண்டது. ஆண்ட்ராய்டு பை இயங்கு தளத்தில் செயல்படும்.
2. மொபைல் 6.3 இன்ச் சைஸ் உடையது. முழு எச்.டி. 1080x2340 பிக்சல்கள்
3. ஆக்டா கோர் குவால்கம் ஸ்நாப் ட்ராகன் 660 இதில் பொருத்தப்பட்டுள்ளது.
4. ரேம் மெமரி 4 ஜிபி. இதனால் கேம் விளையாடும்போது ஹேங் ஆகும் வாய்ப்புகள் குறைவு
5. கேமரா 48 மெகா பிக்சல்.
6. இன்பீல்ட் மெமரி 32 மற்றும் 64 ஜிபிக்களில் கிடைக்கிறது.
7. அதிகபட்சமாக 256 ஜிபி மெமரி கார்டை இதில் பயன்படுத்த முடியும்.
8. 3.5 எம்.எம். ஹெட்போன் ஜேக்
9. பேட்டரி பவர் 4,000 ஆம்பியர். விரைவாக சார்ஜ் ஏறும் தன்மை கொண்டது.
10. போனின் அமைப்பு 159.2 மி.மீ. உயரமும், 75 மி.மீ. அகலமும், 8.1 மி.மீ. தடிமனும் கொண்டது. மொத்த எடை 186 கிராம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்