ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
எம்ஐ நோட்புக் 14 இன்ச் ஹாரிசான் எடிசன் 52,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது
ஷாவ்மி தரப்பில் சுதந்திர தின சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஷாவ்மி நிறுவனம் சுதந்திர தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. அமேசானின் பிரைம் டே சேல், ஃபிளிப்கார்ட்டின் பிக் சேவிங்ஸ் டே சேல் ஆகியவற்றைப் போலவே ஷாவ்மியின் சுதந்திர தின சலுகைகள் உள்ளன.
இந்த வருடம் அறிமுகமாகன ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரெட்மி K20 ப்ரோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை 4 ஆயிரம் ரூபாய் வரையில் குறைக்கப்பட்டு, 22,999 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. இது 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும்.
இதே போல் 32 இன்ச் அளவுள்ள எம்ஐ 4A ப்ரோ டிவி 11,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எம்ஐ ஸ்மார்ட்பேண்ட் 4A தயாரிப்புக்கு 200 ரூபாய் குறைக்கப்பட்டு, தற்போது 2,099 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஐ லேப்டாப்புக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஐ நோட்புக் 14 இன்ச் ஹாரிசான் எடிசன், 52,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் எம்ஐ.,யின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆஃபர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருக்கும்.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features