Redmi K20 மற்றும் Redmi K20 Pro போன்கள் கூடுதலாக Mi Super Sale-ன் போது பழைய போன்களை எக்ஸ்சேஞ் செய்துகொள்ள ரூ.2,000 தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
5 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க, ICICI வங்கியுடன் Mi.com கூட்டு சேர்ந்துள்ளது
ஜியோமி தற்போது Mi.com-ல் Mi Super sale-ஐ நடத்திவருகிறது. மேலும், ஸ்மார்ட்போன்களில் ரூ.4,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இந்த விற்பனை பிப்ரவரி 7-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதில் விலைக் குறைப்புகளைத் தவிர, Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro மற்றும் Redmi K20 சீரிஸில் no-cost EMI ஆப்ஷன்களை நிறுவனம் வழங்குகிறது. விற்பனை காலத்தில் வாங்குவோருக்கு ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க, ஐஐசிஐசிஐ வங்கியுடன் Mi.com கூட்டு சேர்ந்துள்ளது.
புதிய Redmi Note 8 Pro-வில் விலைக் குறைப்பு இல்லை, ஆனால் எக்ஸ்சேஞில் 6GB + 128GB வேரியண்ட் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியை பெறும். மறுபுறம், Redmi Note 7 Pro-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் குறைந்த விலையில் ரூ.9,999-க்கு வழங்குகிறது. இதன் பொருள், Mi.com-ல் ரூ.4,000 விலைக் குறைப்புடன் பட்டியலிடப்படுள்ளது. இதன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.10,999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது, அதே சமயம் அதன் 6GB + 128GB மாடல் தள்ளுபடி விலையுடன் ரூ.13,999-க்கு பட்டியலிட்டுள்ளது. Redmi Note 7 Pro 6GB + 128GB வேரியண்டும் எக்ஸ்சேஞில் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியை பெறும்.
Redmi K20-யின் 6GB + 64GB மாடல் ரூ.19,999-யில் இருந்து தொடங்குகிறது. சில்லறை விற்பனையில் ரூ.2,000 விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் 6GB + 128GB மாடல் Mi.com-ல் ரூ.22,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எக்ஸ்சேஞில், கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது, புதிய பர்சேஸுடன் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், பயனுள்ள விலையை மேலும் குறைக்கும். இதேபோல், Redmi K20 Pro 6GB + 128GB மாடல் ரூ.3,000 விலைக் குறைப்புடன் ரூ.24,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போனின் 8GB+256GB வேரியண்டும் அதிகாரப்பூர்வ Mi.com store-ல் இருந்து குறைக்கப்பட்ட விலையான, ரூ.27,999-க்கு வாங்கலாம். no-cost EMI மற்றும் ICICI வங்கி தள்ளுபடி ஆப்ஷன்களைத் தவிர, Redmi K20 Pro, எக்ஸ்சேஞ் ஆஃபரில் ரூ.2,000 கூடுதல் தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும்.
Mi Super Sale-ன் போது, Redmi Note 7S ரூ.2,000 விலைக் குறைப்புடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 3GB + 32GB மாடல் ரூ.8,999-யாகவும், அதன் 4GB + 64GB மாடல் ரூ.9,999-யாகவும் விலையிடப்படுள்ளது. இறுதியாக, Redmi Go-வும் ஆரம்ப விலையான ரூ.4,299-க்கு பட்டியலிடப்படுள்ளது. ஜியோமி, Mi Protect-ஐ ரூ.399-க்கும், Mi Screen Protect-ஐ ரூ.299-க்கும் வழங்குகிறது. Mi Super Sale-ல் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ஜியோமியின் பிரத்யேக விற்பனை பக்கத்தில் (sale page) காணலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket