Redmi K20 Pro - இப்படி ஒரு அறிவிப்பு வெளிவந்திருந்தாலும், இந்த தகவல் சீனாவுக்கு மட்டும் பொருந்துமா அல்லது அனைத்து சந்தைகளுக்கும் பொருந்துமா என்பதில் தெளிவு இல்லை.
Redmi K20 Pro - ரெட்மி K20 ப்ரோவின் அடுத்த வெர்ஷனான ரெட்மி K30 ப்ரோ, வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம், ஷாவ்மி (Xiaomi) நிறுவனம், ரெட்மி K30 மற்றும் K30 ப்ரோ போன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெட்மி K30 ஸ்மார்ட் போனை மட்டும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது ஷாவ்மி. அதே நேரத்தில் பலரும் எதிர்பார்க்கும் ரெட்மி K30 ப்ரோவின் வெளியீடு வெகு தொலைவில் இல்லை. இந்நிலையில் ஷாவ்மி நிறுவனத்தின் துணைத் தலைவர், லு வெய்பிங், “ரெட்மி K20 ப்ரோ போன் இந்த மாதத்தில் இருந்து விற்கப்படாது” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரெட்மி K20 ப்ரோ வெளிவந்து இன்னும் ஓராண்டைக் கூட நிறைவு செய்யாத நிலையில், ஷாவ்மியின் இந்த நடவடிக்கை சர்ப்ரைஸாக உள்ளது. அதே நேரத்தில் இந்த நடவடிக்கையின் மூலம் K30 ப்ரோ போனுக்கு ஷாவ்மி அடித்தளமிடுவதாகத் தெரிகிறது.
இதுவரை உலக அளவில் 50 லட்சம் K20 ப்ரோ போன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக கூறுகிறது ஷாவ்மி. அதே நேரத்தில் பிப்ரவரி மாதத்தோடு இந்த போன்கள் சந்தைக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. K20 ப்ரோ, கடந்த ஆண்டு மே மாதம், சீனாவில் வெளியிடப்பட்டது.
இப்படி ஒரு அறிவிப்பு வெளிவந்திருந்தாலும், இந்த தகவல் சீனாவுக்கு மட்டும் பொருந்துமா அல்லது அனைத்து சந்தைகளுக்கும் பொருந்துமா என்பதில் தெளிவு இல்லை.
இது குறித்து விளக்கம் பெற ஷாவ்மி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம். “ரெட்மி K20 ப்ரோ போன்கள் இந்தியாவில் தொடர்ந்து கிடைக்கும். காரணம் அது எங்களின் ப்ரீமியம் ஸ்மார்ட் போன்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது என்பதனால்,” என்று கூறியுள்ளது.
ரெட்மி K20 ப்ரோவின் அடுத்த வெர்ஷனான ரெட்மி K30 ப்ரோ, வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய போன், ஸ்னாப் டிராகன் 865 எஸ்ஓசி ப்ராசஸர், 8 ஜிபி ரேம் மூலம் பவரூட்டப்படும் என்றும், குவாட் - கோடு ரியர் கேமரா, 64 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளிட்ட அம்சங்களைப் பெற்றிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November