Redmi நிறுவனம் புதிய Redmi Watch 6-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 2.07 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 24 நாட்கள் வரை பேட்டரி லைஃப் தரும்
Photo Credit: Redmi
ரெட்மி வாட்ச் 6 பிரைட் மூன் சில்வர், எலிகண்ட் பிளாக் மற்றும் மிஸ்டி ப்ளூ வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது
ஸ்மார்ட்வாட்ச் வாங்கணும்னு பிளான் பண்றீங்களா? அப்போ Redmi-ல இருந்து ஒரு சூப்பர் பவர்ஃபுல் வாட்ச் இப்போ லான்ச் ஆகிருக்கு. அதான் நம்ம Redmi Watch 6! இந்த வாட்ச்-ல ஒரு மேஜிக் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா? வாங்க பார்க்கலாம். Redmi நிறுவனம், Redmi K90 மற்றும் K90 Pro Max மொபைல்களுடன் சேர்த்து, இந்த புதிய ஸ்மார்ட்வாட்சை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்காங்க. முதல்ல எல்லாரும் எதிர்பார்க்கிற பேட்டரி லைஃப் பத்தி பேசலாம். இதுல இருக்கிற 550mAh லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி நார்மல் பயன்பாட்டுல சுமார் 12 நாட்கள் வரைக்கும் சார்ஜ் தாங்குமாம். ஆனா, நீங்க அதை பேட்டரி சேவர் மோட்ல போட்டா, அடேங்கப்பா... கிட்டத்தட்ட 24 நாட்கள் வரைக்கும் சார்ஜ் நிக்குமாம்! அதாவது, மாசத்துல ஒரு தடவை சார்ஜ் போட்டா போதும்! இதுதான் இந்த வாட்சோட பெரிய ஹைலைட். சார்ஜ் பண்றதையே மறக்கிற அளவுக்கு இந்த பேட்டரி பவர்ஃபுல்லா இருக்கு.
அடுத்து, டிஸ்ப்ளே. Redmi Watch 6-ல ஒரு பெரிய 2.07 இன்ச் AMOLED கலர் ஸ்கிரீன் கொடுத்திருக்காங்க. 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இருக்கிறதால, வெயில்ல போனாலும் ஸ்க்ரீன் பளிச்சுனு தெரியும். அதுமட்டுமில்லாம, Always-On Display (AOD) வசதி இருக்கிறதால, நீங்க வாட்சை தட்டாமலேயே டைம் பார்க்க முடியும். டிஸ்ப்ளேவுக்கு 2.5D கர்வ்டு கிளாஸ் ப்ரொடெக்ஷனும் இருக்கு.
இந்த வாட்ச் Xiaomi Surge OS 3-ல இயங்குது. இதுல சூப்பர் ஐலேண்ட் இன்டர்ஃபேஸ்ன்னு ஒரு புது சிஸ்டம் கொடுத்திருக்காங்க. ஸ்மார்ட் டிவைஸ் இன்டர்கனெக்ஷன் வசதி இருக்கிறதால, இதை ஒரு கண்ட்ரோலராவும் பயன்படுத்த முடியும். மெசேஜ் வந்தா, வாய்ஸ் மூலமா, எமோடிகான்ஸ் மூலமா கூட உடனே ரிப்ளை பண்ணலாம்.
ஃபிட்னஸ் பத்தி பேசினா, இதுல 150-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்ஸ் இருக்கு! ரன்னிங், ஸ்விம்மிங்னு எல்லாத்துக்கும் டிராக் பண்ண முடியும். அதுமட்டுமில்லாம, இதயத் துடிப்பு (Heart Rate), இரத்த ஆக்ஸிஜன் அளவு (SpO2), தூக்க கண்காணிப்பு (Sleep Monitoring) மற்றும் மன அழுத்தத்தைக் கண்காணிக்கும் சென்சார்னு எல்லா ஹெல்த் டிராக்கிங் வசதிகளும் இருக்கு. இதுல 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் இருக்கு.
அதனால ஸ்விம்மிங் பண்ணும்போது கவலையே இல்லாம இதை யூஸ் பண்ணலாம். கனெக்டிவிட்டிக்கு புளூடூத் 5.4 மற்றும் NFC சப்போர்ட் இருக்கு. GPS வசதிக்காக டூயல் GNSS ஆண்டெனாக்கள் கொடுத்திருக்காங்க. பாக்க ரொம்ப ஸ்லிம்-ஆவும், லைட் வெயிட்டாவும் (9.9mm தடிமன், 31 கிராம் எடை) இருக்கு.
சரி, இப்போ விலை என்னன்னு பார்ப்போம். Redmi Watch 6-ன் விலை சீனாவில் CNY 599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் பார்த்தால், இது சுமார் ₹7,400/- ஆகும். இது Bright Moon Silver, Elegant Black, மற்றும் Misty Blue ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்குது. மொத்தத்துல, Redmi Watch 6 ஒரு மாசான ஸ்மார்ட்வாட்ச். முக்கியமா, நீண்ட பேட்டரி லைஃப் தான் இதோட பலம். இந்த வாட்ச் இந்தியாவுக்கு வரும்போது, கண்டிப்பா மத்த பிராண்டுகளுக்கு ஒரு பெரிய சவாலா இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nothing Phone 3a Lite Launch Date Confirmed: See Expected Specifications, Price
Lava Shark 2 4G Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Rear Camera: Price, Specifications