மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய 'Moto Watch' ஸ்மார்ட்வாட்ச்சை வரும் ஜனவரி 23 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Photo Credit: Motorola
மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 13 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று கூறுகிறது.
மோட்டோரோலா (Motorola) இப்போ செம ஃபார்ம்ல இருக்காங்கன்னு தான் சொல்லணும். ஒரு பக்கம் அவங்களோட 'சிக்னேச்சர்' (Signature) சீரிஸ் போனை லான்ச் பண்ண ரெடி ஆகிட்டு இருக்காங்க, இன்னொரு பக்கம் ஸ்மார்ட்வாட்ச் மார்க்கெட்டையும் ஒரு கை பாத்துரலாம்னு புது Moto Watch-ஐ கொண்டு வர்றாங்க. வர்ற ஜனவரி 23-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த வாட்ச் இந்தியாவில அதிகாரப்பூர்வமா காலடி எடுத்து வைக்கப்போகுது. "பாக்க லட்சணமாவும் இருக்கணும், வேலையும் சரியா செய்யணும்"னு நினைக்கிறவங்களுக்கு இந்த வாட்ச் ஒரு சூப்பர் சாய்ஸா இருக்கும். வாங்க, இதுல என்னென்ன விசேஷம் இருக்குன்னு பார்ப்போம். முதல்ல இதோட லுக்கை பத்தி சொல்லணும்னா, இது ஒரு 47mm ரவுண்ட் டயல் (Round Dial) டிசைன்ல வருது. 1.4-இன்ச் OLED ஸ்கிரீன் இருக்குறதால கலர்ஸ் எல்லாம் செம பிரகாசமா இருக்கும். முக்கியமா, இந்த செக்மென்ட்ல Corning Gorilla Glass 3 பாதுகாப்பு இருக்குற ஒரே வாட்ச் இதுதான்னு மோட்டோரோலா சொல்லிருக்காங்க. அதனால ஸ்கிரீன்ல ஸ்கிராட்ச் விழுமோன்னு கவலைப்பட தேவையில்லை. இதோட அலுமினியம் ஃபிரேம் மற்றும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பட்டன் (Crown) வாட்சுக்கு ஒரு பிரீமியம் லுக் கொடுக்குது.
இந்த வாட்ச்சோட ஹைலைட்டே இதோட ஹெல்த் ஃபீச்சர்கள் தான். உலகப்புகழ் பெற்ற Polar நிறுவனத்தோட டெக்னாலஜியை இதுல பயன்படுத்தியிருக்காங்க. இதனால ஹார்ட் ரேட் (Heart Rate), தூக்கம் (Sleep), ஸ்ட்ரெஸ் (Stress) மற்றும் ரத்தத்துல இருக்குற ஆக்சிஜன் அளவு (SpO2) என எல்லாத்தையும் ரொம்ப துல்லியமா கணக்கிடும். நீங்க ஓடுறீங்களா இல்ல ஜிம்முக்கு போறீங்களா? எதுவா இருந்தாலும் போலார் இன்சைட்ஸ் மூலமா உங்க உடற்பயிற்சி எந்த அளவுக்கு எஃபெக்டிவா இருக்குன்னு இது சொல்லிடும்.
இதுல Moto AI வசதி இருக்கு. முக்கியமா "Catch me up" அப்படின்ற ஒரு ஃபீச்சர் மூலமா, உங்க போனுக்கு வந்த நோட்டிபிகேஷன்ஸை சிம்பிளா ஒரு சம்மரியா இந்த வாட்ச்லயே படிச்சுக்கலாம். கூடவே ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) வசதி இருக்குறதால, போனை எடுக்காமலேயே வாட்ச் மூலமாவே பேசிக்கலாம். டூயல் ஃப்ரீக்வென்சி ஜிபிஎஸ் (Dual-frequency GPS) இருக்குறதால, நீங்க வெளிய வாக்கிங் போகும்போது உங்க பாதையை ரொம்ப துல்லியமா ட்ராக் பண்ணும்.
ஸ்மார்ட்வாட்ச் வாங்குறவங்களுக்கு இருக்குற பெரிய கவலை பேட்டரி தான். ஆனா மோட்டோ வாட்ச்ல அந்த கவலையே வேண்டாம். ஒரு தடவை ஃபுல் சார்ஜ் பண்ணா 13 நாள் வரைக்கும் பேட்டரி நிக்கும்னு கம்பெனி சொல்லிருக்காங்க. நீங்க 'Always-On Display' (AOD) ஆன் பண்ணி வச்சிருந்தா கூட 7 நாள் வரைக்கும் தாராளமா வரும்.
இந்த வாட்ச் மேட் பிளாக் (Matte Black) மற்றும் மேட் சில்வர் (Matte Silver) என ரெண்டு கலர்ல கிடைக்குது. இதோட விலை சுமார் ரூ. 10,000 ரேஞ்சுல இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. ஜனவரி 23 லான்ச்சுக்கு அப்புறம் இது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா வெப்சைட்ல விற்பனைக்கு வரும்.
ஸ்டைலான லுக், ஸ்ட்ராங்கான கிளாஸ், அப்புறம் போலார் நிறுவனத்தோட துல்லியமான ட்ராக்கிங் - இதெல்லாம் சேந்து வர்ற இந்த மோட்டோ வாட்ச், கண்டிப்பா சாம்சங் மற்றும் அமாஸ்ஃபிட் (Amazfit) வாட்ச்களுக்கு ஒரு டஃப் கொடுக்கும். இந்த வாட்ச் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ₹10,000 பட்ஜெட்ல இது ஒர்த்-தா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Asus Reportedly Halts Smartphone Launches ‘Temporarily’ to Focus on AI Robots, Smart Glasses
New Solid-State Freezer Could Replace Climate-Harming Refrigerants