Oppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்சான Oppo Watch S-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: Oppo
Oppo Watch S வலது பக்கத்தில் இரண்டு வழிசெலுத்தல் பொத்தான்களுடன் ஒரு வட்ட டயலைக் கொண்டுள்ளது
ஸ்மார்ட்வாட்ச் மார்க்கெட்ல இப்போ பெரிய போட்டி நிலவிக்கிட்டு இருக்கு. இந்த சந்தையில Oppo நிறுவனம் ஒரு புதிய மற்றும் பவர்ஃபுல்லான வாட்சை லான்ச் பண்ணியிருக்காங்க. அதுதான் Oppo Watch S! இது வெறும் நேரம் பார்க்க மட்டும் இல்லை, நம்ம ஆரோக்கியத்தை ரொம்ப டீடெய்லா கண்காணிக்கப் போகுது. வாங்க, இதுல என்னென்ன இருக்குன்னு பார்க்கலாம். Oppo Watch S ஒரு வட்ட வடிவிலான டயலுடன் (Round Dial) வந்திருக்கு. இது பார்க்கிறதுக்கு ரொம்ப ஸ்டைலா இருக்கு. இதோட தடிமன் வெறும் 8.9mm தான், எடை 35 கிராம் தான். இது ரொம்ப மெலிசாகவும், கையில் கட்ட இலகுவாகவும் இருக்கும். இதுல 1.46-inch அளவுள்ள AMOLED டிஸ்பிளே இருக்கு. இந்த ஸ்கிரீன் 3,000 nits வரை பீக் பிரைட்னஸைத் தரக்கூடியது. அதனால் வெயில்ல கூட டிஸ்பிளே ரொம்ப தெளிவாக தெரியும்.
உடல்நல கண்காணிப்பில் புரட்சி
இந்த வாட்ச்-இன் பெரிய ஹைலைட்டே, அதோட Health Monitoring அம்சம்தான்.
Temperature Monitoring: இது உங்க மணிக்கட்டின் வெப்பநிலையை அளக்கும் சென்சாருடன் வந்திருக்கு.
16-Channel SpO2: இதுல இருக்குற 16-Channel Optical Pulse Oximeter Sensor மூலமா, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை (SpO2) மிகத் துல்லியமாக அளவிட முடியும்.
ECG: கூடவே, ECG (இதயத்தின் மின் செயல்பாடு) சென்சாரும் இருக்கு.
60 வினாடி செக்: இதுல இருக்குற ஒரு ஆப்ஷனை செலக்ட் பண்ணா, வெறும் 60 வினாடிகளில் இதய துடிப்பு (Heart Rate), ECG, இரத்த ஆக்ஸிஜன் அளவு, வெப்பநிலை உட்பட 13 உடல்நலக் குறிகாட்டிகளை ஒரே நேரத்தில் அளவீடு செய்து ஒரு ரிப்போர்ட் கொடுக்குமாம். இது நிஜமாகவே ஒரு டாக்டர் உங்க கூடவே இருக்கிற மாதிரி!
மற்ற சிறப்பம்சங்கள்:
பேட்டரி: 339mAh பேட்டரி கொண்டது. சாதாரண பயன்பாட்டில் 7 நாட்கள் வரையிலும், பவர் சேவிங் மோடில் 10 நாட்கள் வரையிலும் தாங்கும்னு Oppo சொல்றாங்க. வெறும் 10 நிமிடம் சார்ஜ் போட்டா, ஒரு நாள் முழுக்க யூஸ் பண்ணலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: இது ColorOS Watch 7.1-ல் இயங்குது.
ஃபிட்னஸ்: 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள், AI Sports Coach வசதி கூட இருக்கு.
இந்த வாட்ச் விரைவில் உலக சந்தைக்கு வரும், அதுல இந்தியாவும் இருக்கு. இந்த Oppo Watch S-இன் சிறப்பம்சங்கள் உங்களுக்குப் பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo Y500 Pro With MediaTek Dimensity 7400 Chipset, 7,000mAh Battery Launched: Price, Specifications