நத்திங் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆன Nothing Ear 3 அதன் புதுமையான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
Photo Credit: Nothing
இந்த போன்கள் டைமென்சிட்டி 9500 சிப் மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக வரும் என தகவல்
டிரான்ஸ்ப்ரன்ட் டிசைன்லயே அட்டகாசமா அசத்தி வரும் நத்திங் நிறுவனம், இப்போ அதோட புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆன Nothing Ear 3 அறிமுகப்படுத்த ரெடியாகிடுச்சு! இந்த இயர்பட்ஸ் வரும் செப்டம்பர் 18-ம் தேதி லான்ச் ஆகப் போறதா அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. இது வெளியாறதுக்கு முன்னாடியே, அதோட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிசைன் பத்தின தகவல்கள் வெளியாகி, ரசிகர்களை ரொம்பவே ஆச்சர்யப்படுத்திருக்கு.முதல்ல, இந்த புது இயர்பட்ஸோட கேஸ் பத்தி பாக்கலாம். போன மாடலான இயர் 2-ல டிரான்ஸ்ப்ரன்ட் பிளாஸ்டிக் கேஸ் இருந்துச்சு. ஆனா, இந்த இயர் 3-ல, கேஸ் ஒரு மெட்டாலிக் ஃபினிஷ்-உடன் வரும். இயர்பட்ஸை வைக்குற இடங்களும் கூட டிரான்ஸ்ப்ரன்ட் குரூவ்ஸ்-க்கு பதிலா மெட்டல் குரூவ்ஸா மாத்தப்பட்டிருக்கு. இது கேஸுக்கு ஒரு 'பாக்ஸி' ஃபீல் கொடுக்குது. ஆனா, கேஸோட மூடி மட்டும் டிரான்ஸ்ப்ரன்ட்டா இருக்குறது, நத்திங்-கோட பழைய ஸ்டைலை ஞாபகப்படுத்துது.
இயர்பட்ஸோட ஸ்டெம்ஸ்-ல இன்னும் டிரான்ஸ்ப்ரன்ட் டிசைன் இருக்கு. ஆனா, இதுல சில மெட்டாலிக் பாகங்கள் சேர்க்கப்பட்டு, புதுசா இருக்கு. இந்த மெட்டல் பாகங்கள் 100% அனோடைஸ் செய்யப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் செய்யப்பட்டதாம். இது இயர்பட்ஸ்-ஓட நீடித்து உழைக்கும் தன்மையை அதிகமாக்கும்னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, இயர்பட்ஸ்க்குள்ள இருக்குற ஆண்டெனாவும் கூட, மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, இன்னும் மெலிசாவும், மெட்டலிலயும் இருக்கு. இது இயர்பட்ஸ்-ஓட கம்யூனிகேஷன் மற்றும் இணைப்புத் தரத்தை இன்னும் மேம்படுத்தும்.
இந்த புதிய மாடல்ல எல்லாரையும் கவர்ந்த விஷயம், கேஸோட முன்பக்கத்துல இருக்குற ஒரு மர்மமான 'டாப் பட்டன்' தான். இது எதுக்குன்னு இன்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கல. ஆனா, இதைப் பத்தி சில யூகங்கள் இருக்கு. ரொம்ப சத்தமான இடங்கள்ல தெளிவா பேச உதவும் 'சூப்பர் மைக்' அம்சத்தை ஆன் பண்றதுக்கு இந்த பட்டன் இருக்கலாம்னு சொல்றாங்க. இல்லன்னா, இது வீடியோ, ஆடியோ உருவாக்குபவர்களுக்கு உதவும்னு அல்லது வாக்கி-டாக்கி மாதிரி ஒரு இயர்பட்ல இருந்து இன்னொரு இயர்பட்க்கு பேச உதவும்னு கூட சில வதந்திகள் பரவுது. சில வல்லுநர்கள், இது போன்ல இருக்க AI அசிஸ்டன்ட்டோட நேரடியா பேச உதவும்னு கூட சொல்றாங்க. போன் கூட பேர் பண்ற பட்டன் கேஸ்க்கு உள்ளேயே இருக்கிறதால, இந்த 'டாப் பட்டன்' ஒரு புதிய அம்சத்துக்குத்தான் இருக்கும்னு உறுதியா சொல்லலாம்.
நத்திங் நிறுவனம், எப்பவும் தங்களோட புதுமையான டிசைனுக்காகவும், தெளிவான சவுண்ட் அனுபவத்துக்காகவும் பேர் போனவங்க. அதனால, இந்த இயர் 3-லயும் புதுமையான தொழில்நுட்பங்கள் நிறைய இருக்கும்னு எதிர்பார்க்கலாம். நத்திங் இயர் 2-ல இருந்த சிறப்பான ANC (Active Noise Cancellation) மற்றும் சவுண்ட் குவாலிட்டி, இந்த மாடல்ல இன்னும் ஒரு படி மேம்படுத்தப்படலாம். இந்த இயர்பட்ஸ் செப்டம்பர் 18-ல் அறிமுகமான பிறகு, இந்த பட்டனோட உண்மையான பயன்பாடு என்னன்னு, அதோட மற்ற அம்சங்கள் என்னன்னு தெரிஞ்சுபோகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்