பட்ஜெட் ஹெட்போன்கள் வரிசையில் மேலும் ஒரு அதிரடி தயாரிப்பு!

இந்த பட்ஜெட் இயர்போன் தயாரிப்பு மூன்று நிறங்களில் வெளியாகிறது!

பட்ஜெட் ஹெட்போன்கள் வரிசையில் மேலும் ஒரு அதிரடி தயாரிப்பு!
ஹைலைட்ஸ்
  • ஜாப்ரா நிறுவனம் சார்பில் ரூ. 7,299க்கு புதிய ஹெட்போன்கள் அறிமுகம்!
  • இந்த ஹெட்போன்கள் மூன்று நிறங்களில் வெளியாகிறது.
  • இந்த தயாரிப்பு வரும் ஏப்ரல் 20 முதல் விற்பனைக்கு வெளியாகிறது.
விளம்பரம்

உலகம் முழுவதும் வயர்லஸ் பட்ஜெட் ஹெட்போன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 'தி ஜாப்ரா மூவ்' என்ற நிறுவனம் தனது ஆன்-இயர் ஹெட்போன்களை ஆன்லைன் தளத்தில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. ஆன்லைனில் ஜாப்ரா மூவ் என்ற பெயரில் தனது பட்ஜட் ஹெட்போனை ரூ.5,999க்கு அறிமுகம் செய்தது.

இந்த தயாரிப்பு தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.5,000க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 8 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என்ற அமைப்பை பெற்றதால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. 

இப்படி தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் ஜாப்ரா தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது ஜாப்ரா நிறுவனம் சார்பில் 'ஜாப்ரா மூவ்' மற்றும் 'ஜாப்ரா மூவ் ஸ்டைல்'  என இரண்டு ஹெட்போன் தயாரிப்புகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த புதிய வயர்லஸ் ஹெட்போன்கள் ரூ.7,299க்கு விற்பனை செய்யப்படுகின்றனர். மேலும் இந்த தயாரிப்புகள் வர்ம் ஏப்ரல் 20 தேதி முதல் அமேசான், குரோமா போன்ற பல்வேறு ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் இந்த ஜாப்ரா ஸ்டைல் தயாரிப்பு டைட்டானியம் பிளாக், கோல்டு பீஜ் மற்றும் நேவி போன்ற மூன்று நிறங்களில் வெளியாகிறது. தனது முந்தைய தயாரிப்புகளை காட்டிலும் பேட்டரி வசதி இந்த ஹெட்போன்களில்  மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 14 மணிநேரம் வரை இந்த ஹெட்போனை பயன்படுத்த முடிகிறது. இந்த வயர்லஸ் ஹெட்போனுடன் 3.5mm கேபிள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வயர்ட் ஹெட்போனாகவும் இந்த தயாரிப்பை பயன்படுத்த முடிகிறது.

மேலும் இந்த தயாரிப்பில் கூடுதல் அமைப்புகளாக அன்-இயர் டிசைன், கால்கள் பேசும் வசதி மற்றும் பிளேபேக் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாப்ரா நிறுவனம் தனது எலைட் 85h என்னும் தேவையற்ற சப்தத்தை தடைசெய்யும் வசதிபெற்ற வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்தது. இந்த தயாரிப்பு சோனி WH-1000XM3 மற்றும் போஸ் QC35ii ஹெட்போன்களுக்கு போட்டியாக வெளியானது. இந்த எலைட் தயாரிப்பு ரூ.20,800யாக மதிப்பிடப்படும் நிலையில் இந்திய சந்தைகளில் இந்த தயாரிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.


 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. S26 வரப்போகுது.. S24 Ultra விலை குறையுது! Flipkart-ல் ரூ. 24,010 வரை அதிரடி டிஸ்கவுண்ட்! மிஸ் பண்ணிடாதீங்க
  2. ஷாப்பிங் லிஸ்ட் ரெடி பண்ணுங்க! Amazon Great Republic Day Sale 2026 ஆரம்பமாகிறது! அதிரடி டீல்கள் இதோ
  3. iPhone 16 Plus வாங்க இதுவே சரியான நேரம்! விஜய் சேல்ஸில் இதுவரை இல்லாத மிகப்பெரிய விலைக்குறைப்பு
  4. வெயிட் பண்ணது போதும்னு நினைச்ச நேரத்துல.. Samsung கொடுத்த ஷாக்! Galaxy S26 லான்ச் மார்ச் மாதத்திற்கு மாற்றம்
  5. "ஏர்" (Air) போல லேசான ஆனா "புயல்" போல வேகமான கேமிங் போன்! RedMagic 11 Air வருகிறது
  6. ஸ்டூடண்ட்ஸ் மற்றும் சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம்! இதோ வந்துவிட்டது பிரம்மாண்டமான OPPO Pad 5
  7. சார்ஜ் தீரும்னு கவலையே வேண்டாம்! 7200mAh பேட்டரியுடன் Vivo Y500i அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
  8. இது வேற லெவல் டீல்! Apple Watch Series 11-க்கு முதல்முறை விலைக்குறைப்பு! பிளிப்கார்ட்டில் அதிரடி ஆஃபர்
  9. Foldable போன் கனவு நனவாகும் நேரம்! Samsung Galaxy Z Fold 7 விலையில் ரூ.19,500 சரிவு
  10. iQOO போன் வாங்க இதுவே சரியான நேரம்! அமேசான் சேலில் கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள் - மிஸ் பண்ணிடாதீங்க
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »