Photo Credit: Huawei
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Huawei Watch GT 5 Pro வாட்ச் பற்றி தான்.
Huawei Watch GT 5 Pro பார்சிலோனாவில் நடந்த நிறுவனத்தின் மேட்பேட் சீரிஸ் டேப்லெட் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. டைட்டானியம் அலாய் மற்றும் செராமிக் பாடி ஆகியவற்றைக் கொண்ட 46 மிமீ மற்றும் 42 மிமீ அளவு மாடல்களில் வருகிறது. IP69K சான்றிதழைப் பெற்றுள்ளது. AMOLED திரையைக் கொண்டுள்ளது. 14 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
Huawei Watch GT 5 Pro விலை தோராயமாக ரூ. 34,000 என்கிற அளவில் தொடங்குகிறது . 46 மிமீ மாடல் கருப்பு மற்றும் டைட்டானியம் ஃபினிஷ்களில் வருகிறது. 42 மிமீ மாடல் செராமிக் ஒயிட் மற்றும் ஒயிட் நிறங்களில் வழங்கப்படுகிறது.
Huawei Watch GT 5 Pro வாட்ச் 466 x 466 பிக்சல்கள் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 42mm மற்றும் 46mm மாடல்களில் கிடைக்கிறது. சிறிய வாட்ச் செராமிக் பாடியை கொண்டுள்ளது. பெரிய மாடல் டைட்டானியம் அலாய் பாடியை கொண்டுள்ளது. பளபளப்பாக தெரிய சபையர் கண்ணாடி பூச்சு போடப்பட்டுள்ளது. எப்போதும் அணியக்கூடிய வகையில் 5 ஏடிஎம் மதிப்பிடப்பட்ட நீர் எதிர்ப்பு மற்றும் அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் IP69K சான்றிதழை பெற்றுள்ளது.
Huawei Watch GT 5 Pro வாட்ச்சில் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு, இதய துடிப்பு, தூக்க கண்காணிப்பு மற்றும் ECG பகுப்பாய்வு வசதிகள் உள்ளன.
முடுக்கமானி, சுற்றுப்புற ஒளி உணரும் சென்சார், காற்றழுத்தமானி, ஆழம் மதிப்பீடும் சென்சார், ஈசிஜி சென்சார், கைரோஸ்கோப், காந்தமானி, ஆப்டிகல் இதயத் துடிப்பு சென்சார் மற்றும் வெப்பநிலை சென்சார் இதில் உள்ளது. இது 100க்கும் மேற்பட்ட Sports Mode ஆப்ஷன்களை கொண்டுள்ளது. கோல்ஃப் மைதான வரைபடத்தையும் டிஸ்பிளேவில் கொண்டுள்ளது.
Huawei Watch GT 5 Pro ஸ்மார்ட்வாட்ச் வழக்கமான பயன்பாட்டில் 14 நாட்கள் பேட்டரி ஆயுளையும், எப்போதும் டிஸ்பிளே ஆன் நிலையில் இருந்தால் ஐந்து நாட்கள் பேட்டரி ஆயுளையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. Huawei Health ஆப்ஸுடன் இணைக்க முடியும். 46 மிமீ மாடல் 53 கிராம் எடையும், 42 மிமீ மாடல் 44 கிராம் எடையும் கொண்டது.
Sunflower Positioning System என்கிற புதிய அம்சம் Huawei Watch GT 5 Pro ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளது. இதன் மூலம் பல்வேறு செயல்பாடுகளின் போது சிறந்த கண்காணிப்பை வழங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்