Samsung நிறுவனம், Google மற்றும் Qualcomm உடன் இணைந்து உருவாக்கிய Galaxy XR ஹெட்செட்டை வெளியிட்டுள்ளது
Photo Credit: Samsung
Galaxy XR: $1,799 ஹெட்செட், XR2+ Gen2 சிப், ஹேண்ட் டிராக்கிங், Gemini AI, டூயல் 4K டிஸ்ப்ளே
உலகத்துல இப்போ எல்லாரும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (AR) பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. இந்தச் சமயத்துல, ஆப்பிள் நிறுவனத்தோட Vision Pro ஹெட்செட்க்குப் போட்டியா Samsung ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்காங்க. அதுதான் இப்போ லேட்டஸ்ட்டா லான்ச் ஆகியிருக்க Samsung Galaxy XR ஹெட்செட். Samsung, Google, மற்றும் Qualcomm ஆகிய மூன்று டெக் ஜாம்பவான்களும் சேர்ந்து இந்த ஹெட்செட்-ஐ உருவாக்கியிருக்காங்க. இது ஆப்பிள் Vision Pro-வோட விலையில கிட்டத்தட்ட பாதியிலயே வந்திருக்கு. Samsung Galaxy XR ஹெட்செட்டோட விலை அமெரிக்கால $1,799 (இந்திய மதிப்பில் சுமார் ₹1,58,000). ஆப்பிள் Vision Pro-வோட ஆரம்ப விலையே $3,499ங்கிறப்போ, இந்த விலை, இந்த செக்மென்ட்ல வாங்க விரும்புறவங்களுக்கு ஒரு நல்ல சாய்ஸ்ஸா இருக்கும். இந்த ஹெட்செட் இப்போதைக்கு அமெரிக்கா மற்றும் தென் கொரியால மட்டும் தான் விற்பனைக்கு வந்திருக்கு. இந்தியாவுக்கு எப்போ வரும்ங்கிற தகவல் இன்னும் வெளியாகல.
இந்த ஹெட்செட்-க்கு பவர் கொடுக்குறதே Qualcomm Snapdragon XR2+ Gen 2 சிப்செட் தான். இது VR மற்றும் AR அனுபவத்துக்காகவே பிரத்யேகமா வடிவமைக்கப்பட்டது. இதோட இன்னொரு பெரிய ஹைலைட் என்னன்னா, இது கூகிளோட புதுசா வந்த Android XR ஆப்பரேட்டிங் சிஸ்டம்ல இயங்குது. அதுல Gemini AI நேரடியா இணைக்கப்பட்டிருக்கு. இதனால, நீங்க எதை பாக்குறீங்களோ, அதை புரிஞ்சுக்கிட்டு உங்களோட சுற்றுப்புறத்துக்கு ஏத்த மாதிரி இந்த AI செயல்படுமாம். உதாரணத்துக்கு, நீங்க ஒரு பொருளை பாத்துட்டு, Circle to Search பண்றது மாதிரியான புது வசதிகள் இதுல இருக்கு.
கட்டுப்பாடு: இந்த ஹெட்செட்டை பயன்படுத்த கன்ட்ரோலர் தேவையில்லை. உங்க கண்களின் அசைவு (Eye Tracking), கை அசைவுகள் (Hand Tracking) மற்றும் வாய்ஸ் கமெண்ட்கள் மூலமாவே இந்த ஹெட்செட் முழுவதையும் இயக்க முடியும். செக்யூரிட்டிக்காக ஐரிஸ் ரெகக்னிஷன் (Iris Recognition) வசதியும் இருக்கு.
டிஸ்ப்ளே: இதுல 4K ரெசல்யூஷன் கொண்ட இரண்டு மைக்ரோ-OLED டிஸ்ப்ளேக்கள் இருக்கு. மொத்தம் 27 மில்லியன் பிக்சல்கள் தரத்தை வழங்குது. இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டை சப்போர்ட் பண்ணுது. நீங்க நிஜ உலகைப் பார்த்துக்கிட்டே அதுல டிஜிட்டல் ஆப்ஸ்களை மிதக்கவிட முடியும் (Passthrough Mixed Reality).
பேட்டரி: இந்த ஹெட்செட் தனியா ஒரு வெளிப்புற பேட்டரி பேக்குடன் (External Battery Pack) வருது. ஹெட்செட்டோட எடை (545 கிராம்) குறைவா இருக்கணும்ங்கிறதுக்காக இந்த ஏற்பாடு. ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 2.5 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்னு Samsung சொல்லியிருக்கு.
கனெக்டிவிட்டி: இது லேட்டஸ்ட் Wi-Fi 7 மற்றும் Bluetooth 5.4 சப்போர்ட்டுன் வந்திருக்கு.
மொத்தத்துல, Samsung Galaxy XR ஹெட்செட், AI மற்றும் Extended Reality-ல ஒரு புது சகாப்தத்தை தொடங்குதுன்னு சொல்லலாம். இந்த தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வரும்போது எப்படி இருக்கும்னு பாக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Assassin's Creed Shadows Launches on Nintendo Switch 2 on December 2