டேப்லெட் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பிடத்தை வழங்குகிறது.
LG G Pad 5 10.1 tablet, Quick Charge 3.0-ஐ ஆதரிக்கிறது
LG G Pad 5 10.1 tablet தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்படுள்ளது. மேலும், அதன் முக்கிய சிறப்பம்சங்களாக 8,200mAh பேட்டரி, quad-core Snapdragon 821 SoC மற்றும் 8-megapixel ரியர் கேமரா உள்ளது. LG G Pad 5 10.1-ன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இதைப் படிக்கவும்.
LG G Pad 5 10.1-ன் விலை
LG G Pad 10.1 tablet-ன் விலை KRW 4,40,000 (சுமார் ரூ. 26,800) ரூபாயாக விலையிடப்பட்டுள்ளது. இது single silver hue நிறத்தில் கிடைக்கிறது. இந்த டேப்லெட் எப்போது சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் என்பதில் எந்த தகவலும் இல்லை.
LG G Pad 5 10.1-ன் விவரக்குறிப்புகள்
விவரக்குறிப்புகளைப் பொருத்தவரை, LG G Pad 5 10.1, Android Pie-யால் இயங்குகிறது. மேலும், 10.1-inch full-HD+ (1920x1200 pixels) IPS LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, 2.34GHz Snapdragon 821 quad-core SoC-யால் இயக்கப்படுகிறது. 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. microSD card-ஐப் பயன்படுத்தி (512GB வரை) விரிவாக்கக்கூடிய ஆப்ஷனும் உள்ளது.
கேமராவைப் பொருத்தவரை, autofocus மற்றும் 5-megapixel செல்ஃபி கேமராவை 8-megapixel ரியர் கேமராவுடன் LG G Pad 5 10.1 tablet வழங்குகிறது. Quick Charge 3.0 உடன் 8,200mAh பேட்டரியை பேக் செய்கிறது. இணைப்பு விருப்பங்களில் Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB Type-C port, 3.5mm audio jack, GPS மற்றும் பல உள்ளன. power மற்றும் volume பொத்தான்களுக்கு அடுத்ததாக டேப்லெட்டின் வலது விளிம்பில் fingerprint சென்சார் அமைந்துள்ளது.
USB Type-C port-ன் இருபுறமும் dual speaker grille உள்ளது. மேலும், பக்கவாட்டில் single SIM tray slot உள்ளது. பரிமாணங்களில் LG G Pad 5 10.1-வானது 247.2x150.7x8mm அளவீடையும் 498 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November