கொரோனா வைரஸ் எதிரொலி: ட்விட்டர், வீட்டில் இருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கியுள்ளது!

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 13 மார்ச் 2020 10:10 IST
ஹைலைட்ஸ்
  • ட்விட்டர் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்குகிறது
  • நிறுவனம் இந்த முடிவை புதன்கிழமை அறிவித்தது
  • WHO புதன்கிழமை COVID-19 பாதிப்பை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது

கொரோனா வைரஸ் பாதிப்பு, நிறுவனங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு மத்தியில், ட்விட்டர் கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய "ஊக்குவித்த" பின்னர் சமூக ஊடக நிறுவனம் புதன்கிழமை இந்த முடிவை அறிவித்தது.

"எங்கள் ட்வீப்புகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு முதன்மை முன்னுரிமை உள்ளது, மேலும் எங்கள் சமூகங்கள், பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் இந்த தொற்றுநோயின் முன் வரிசையில் இருக்கும் சுகாதார வழங்குநர்களை ஆதரிப்பதற்கான பொறுப்பும் எங்களுக்கு உள்ளது" என்று துணைத் தலைவர் ஜெனிபர் கிறிஸ்டி (Jennifer Christie), Twitter-ல் உள்ளவர்கள்களுக்கு ஒரு வலைப்பதிவில் எழுதினர்.

"இந்த உந்துதலைத் தொடர, மார்ச் 2-ஆம் தேதி வழங்கப்பட்ட 'வீட்டிலிருந்து வேலையை செய்ய ஊக்குவிக்கும்' எங்கள் முந்தைய வழிகாட்டுதலுக்கு அப்பால் நகர்கிறோம், இப்போது உலகளவில் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) புதன்கிழமை COVID-19 பாதிப்பை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது.

இந்த வைரஸ் உலகளவில் பரவி, 1,18,000 பேருக்கு தொற்று பரவியுள்ளது மற்றும் 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

வீட்டிலிருந்து தங்கள் வேளைகளை செய்ய முடியாத ஒப்பந்தக்காரர்கள் மற்றும் மணிநேர தொழிலாளர்களுக்கு, ட்விட்டரின் வேலை-வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வழிகாட்டுதல் மற்றும் / அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்போது, ​​நிலையான வேலை நேரங்களை ஈடுசெய்ய ட்விட்டர் தொடர்ந்து தங்கள் தொழிலாளர் செலவுகளைச் செலுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

ட்விட்டர் வீட்டிலிருந்து வேலையை கட்டாயமாக்குவதற்கான "முன்னோடியில்லாத நடவடிக்கை" எடுத்துள்ள நிலையில், Google மற்றும் Amazon உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவித்துள்ளன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: COVID 19, Coronavirus, Twitter
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  2. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  3. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  4. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  5. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  6. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  7. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  8. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  9. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  10. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.