கொரோனா பாதிப்பை தவிர்க்க பொது முடக்கம் போடப்பட்டுள்ள நிலையில், மதுப்பிரியர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்வதற்காக மேற்கு வங்கத்தில் ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள் மது பானங்களை ஹோம் டெலிவரி செய்யவுள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் ஓரிரு நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஒயின் கடைகளுடன் இணைந்து ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ மதுபானங்களை வழங்கத் தொடங்கியுள்ளனர். உணவு விநியோக சேவைகள் முதலில் ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் மதுபான விநியோகத்தை அறிமுகப்படுத்தின, இப்போது அது மேற்கு வங்கத்திற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசிடம் தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பின்னர், முதலில் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் மதுபானம் விநியோக சேவை தொடங்கும். மேற்கு வங்காளத்தின் பர்கனாஸ் மாவட்டத்தில் விரைவில் ஸ்விக்கியின் மதுபான ஹோம்டெலிவரி தொடங்கும்.
மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்காக கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் உள்ள பல அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஒயின் கடைகளுடன் ஸ்விக்கி கூட்டு சேர்ந்துள்ளது.
தயாரிப்பு பட்டியலை நிர்வகிக்கவும், ஆர்டர் செய்யப்படும் பொருட்களின் கிடைக்கும் தன்மையைப் புதுப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட மதுபானங்கள் ‘கையிருப்பில்' அல்லது ‘கையிருப்பில் இல்லை' என்று குறிக்க முடியும்.
சிறுவர்கள் மதுவை ஆர்டர் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒன் டைம் பாஸ்வேர்டு முறை கடைபிடிக்கப்படுகிறது. மாநிலத்தின் கலால் சட்டத்தின்படி ஒரு வாடிக்கையாளர் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட மதுபானம் ஆர்டர் செய்யக்கூடாது என்பதை உறுதிப்படுத்த ஸ்விக்கி ஆர்டர் அளவைக் கட்டுப்படுத்தியுள்ளார்.
கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் மதுபான விநியோகத்தை அறிமுகப்படுத்தியதை ஜோமாடோ நமது கேட்ஜெட் 360யிடம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், வரும் வாரங்களில் எந்தெந்த நகரங்களுக்கு சேவையை கொண்டு வரப்போகிறது என்ற விவரங்களை ஜோமேட்டோ வெளியிடவில்லை.
ஸ்விக்கியைப் போலவே, ஜொமடோ நிறுவனம் பல பாதுகாப்பு செயல்முறைகளை செயதுள்ளது. ஆர்டர் செய்யும் நேரத்தில் மற்றும் மதுபானம் வழங்கப்படும் போது வயது சரிபார்ப்பு இதில் அடங்கும். ஸ்விக்கி போலவே, வாடிக்கையாளர்களும் செல்லுபடியாகும் ஐடி ஆதாரத்தை பதிவேற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஆர்டர் செய்த மதுபானம் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு கிடைக்கும்.
நேரில் சென்று வாங்கும்போது கட்டுக்கடங்காத கூட்டம், அதிகரிக்கப்பட்ட விலை, நெரிசல் என பல சிக்கல்களை மதுப்பிரியர்கள் சந்தித்து வந்தனர். இந்த நிலையில், ஹோம் டெலிவரி சேவை தொடங்கப்பட்டிருப்பது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்