கொரோனா வைரஸ் காரணமாக இஸ்ரோவின் பெரும்பான்மையான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து, பொது முடக்கம் முடிந்த பின்னர் கணக்கெடுக்கப்படும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3-திட்டமும் பாதிப்பு அடைந்திருக்கிறது. நிலைமை சீரடைந்த பின்னர் பணிகள் தொடங்கப்படும்.
கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக இஸ்ரோவின் 10 முக்கிய திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடாபாக அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
கொரோனா வைரஸ் காரணமாக இஸ்ரோவின் பெரும்பான்மையான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து, பொது முடக்கம் முடிந்த பின்னர் கணக்கெடுக்கப்படும்.
முக்கியமாக ககன்யான் திட்டமும் கொரோனாவால்தான் பாதிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோவில் உள்ள பல்வேறு பணிப்பிரிவுகள் பணியை இன்னும் துவக்கவில்லை.
சந்திரயான் 3-திட்டமும் பாதிப்பு அடைந்திருக்கிறது. நிலைமை சீரடைந்த பின்னர் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தது. இதன்பின்னர் சந்திரயான் 3 திட்டம் இந்தாண்டு இறுதியில் செயல்படுத்தப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில் கொரோனாவால் பணிகள் முடங்கிப் போயுள்ளன. ராக்கெட் அல்லது செயற்கைகோள்களை வடிவமைக்கும் பணிகளுக்காக பல்வேறு உதிரி பாகங்கள் தேவைப்படும். இவற்றை பெறுவதற்கு தனியார் நிறுவனங்களை சார்ந்துதான் இஸ்ரோ உள்ளது. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இஸ்ரோவுக்கு தேவையான உபகரணங்களை வழங்குகின்றன.
பொது முடக்கத்தால் அவற்றின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இஸ்ரோவின் திட்டங்களும் முடங்கிப்போயுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month