கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே 51% புதுபிக்க ஆற்றலை பயன்படுத்த தொடங்கியது பேஸ்புக்
பேஸ்புக், அமேசான், கூகுள் போன்ற முன்னனி இணையதளங்கள், உலகம் முழுவதும் நெட்வொர்க் கனெக்டிவிட்டியை உருவாக்க, அதிக அளவிலான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.
2018 ஆம் ஆண்டிற்குள், 50% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் பேஸ்புக் செயல்பாடு இருக்கும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனம் முடிவு செய்தது. அதனை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே 51% புதுபிக்க ஆற்றலை பயன்படுத்த தொடங்கியது பேஸ்புக்.
“புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை வாங்கும் பெருநிறுவனங்களின் பங்கில், பேஸ்புக் முன்னிலையில் உள்ளது” என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுற்றுச்சூழல் மாசடைவதை குறைக்கும் நடவடிக்கையில் பேஸ்புக் பங்களிக்க உள்ளது. எனவே, 2020 ஆம் ஆண்டிற்குள் 100% புதுபிக்கத்தக்க ஆற்றலுடம் பேஸ்புக் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto