நண்பர்களுடன் இருப்பிடத்தைப் பகிர்தல் மற்றும் இயங்குதளத்தின் தடுப்பு செயல்பாடு தொடர்பான பாதுகாப்பு அமைப்புகளை Snapchat மேம்படுத்தியுள்ளது.
Photo Credit: Gadgets 360
பிரபல சமூக வலைதளமான ஸ்னாப் சாட் புதிய ஏஐ தொழில்நுட்பத்தை தனது செயலியில் அறிமுகம் செய்து உள்ளது. இருப்பிடப் பகிர்வு எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இனி பயனர்கள் பிளாக் அம்சத்தை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும். டீனேஜ் வயதில் உள்ளவர்கள் இடையே பொதுவான நண்பர்கள் இல்லை என்றால், அந்நியர்கள் அவர்களுக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பு முடியாது. பயன்பாட்டு எச்சரிக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய பயனர்களுக்கு பதிலளிப்பதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் வசதியும் உள்ளது.
Snapchat பகிர்ந்த விவரங்களின்படி, பயனர்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்காக Block ஆப்ஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது. Snapchatல் பயனர் ஒருவரைத் தடுத்தால், அதே சாதனத்தில் உருவாக்கப்பட்ட பிற கணக்குகளிலிருந்து வரும் புதிய நண்பர் கோரிக்கைகளை ஆப்ஸ் தானாகவே தடுக்கும்.
Snapchatல் உள்ள 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு பரஸ்பர நண்பர்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு இனி நண்பர் கோரிக்கைகளை அனுப்ப முடியாது. இதேபோல் மோசடி நடவடிக்கையுடன் அடிக்கடி தொடர்புடைய பயனர்களுக்கு நட்பு கோரிக்கை அனுப்ப முடியாது. இந்த அம்சத்தின் உள்ளூர் பதிப்பு விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் Snapchatல் இருப்பிடப் பகிர்வு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. Snap Map அம்சத்தில் எந்த நண்பர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பார்க்கலாம் என்பதை இளம் வயது பயனர்கள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
சந்தேகத்திற்கிடமான பயனர்கள் மற்றும் மோசடி செய்பவர்களிடமிருந்து பதின்வயதினரைப் பாதுகாப்பதற்காக Snapchat செயலியில் எச்சரிக்கை அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இது வேறொரு பகுதியைச் சேர்ந்த பயனர்களிடமிருந்து வரும் செய்திகளைப் பற்றி பயனர்களை எச்சரிக்கும். இந்த புதிய அம்சங்கள் சேவை முழுவதும் வெளியிடப்படும் என்று ஸ்னாப்சாட் கூறுகிறது. மேலும் பயனர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Bison Kaalamaadan Is Now Streaming: Know All About the Tamil Sports Action Drama