இனி YouTube பார்க்க இவ்வளோ காசு கட்டியாகணும்!

YouTube Premium சேவையின் கட்டணத்தை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இனி YouTube பார்க்க இவ்வளோ காசு கட்டியாகணும்!

Photo Credit: Pexels/ Szabo Viktor

ஹைலைட்ஸ்
  • யூடியூப் பிரீமியம் சந்தா கட்டணம் உயர்ந்துள்ளது
  • ரூ 189 முதல் மாதம் ரூ 299 வரை செலுத்த வேண்டும்
  • ப்ரீபெய்டு YouTube பிரீமியமும் உயர்ந்துள்ளது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது YouTube Premium பற்றி தான்.

ஒவ்வொரு மொழியிலும் யூடியூப் வீடியோக்கள் கிடைப்பதால், பலர் யூடியூப்பையே அதிகம் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் YouTube Premium சந்தா கட்டணத்தை கூகுள் அதிகரித்துள்ளது. YouTube Premium சேவையின் கட்டணத்தை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. YouTube Premium வசதி துவங்கப்பட்டு 5 ஆண்டுகளில் இந்த கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால், தனிநபர், குடும்பம் மற்றும் மாணவர் உட்பட அனைத்து சந்தா திட்டங்களும் இப்போது கணிசமாக விலை கண்டுள்ளது. சில திட்டங்களுக்கு விலை உயர்வு சிறியதாக இருந்தாலும், மற்றவை அவற்றின் அசல் விலையை விட கணிசமாக அதிகரித்துள்ளது. YouTube Premium மூலம் சந்தாதாரர்கள் வீடியோக்களை விளம்பரமில்லாமல் பார்க்க முடியும். ஸ்ட்ரீமிங், வீடியோக்களைப் பார்க்கும் திறன், பின்னணியில் இசையைக் கேட்கும் திறன், பிக்சர்-இன்-பிக்ச்சர் (PiP) பயன்முறை போன்ற வசதிகளை பெறுகின்றனர்.

யூடியூப் பிரீமியம் விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. புதிய ப்ளான் எடுப்பவர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் பொருந்தும். ஏற்கனவே ஏதேனும் பிரீமியம் திட்டத்தில் இருப்பவர்கள் அடுத்தமுறை கட்டணம் செலுத்தும் போது புதிய கட்டண முறை அமலுக்கு வரும்.

மாதாந்திர, காலாண்டு, ஆண்டு தனிநபர் முன்பணத் திட்டங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன

யூடியூப் பிரீமியம் மாதாந்திர சந்தா திட்டம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று மாத காலாண்டு திட்டத்தின் விலை ரூ.399ல் இருந்து ரூ.459 ஆக அதிகரித்துள்ளது.

ஆண்டு திட்ட விலை ரூ.1,290ல் இருந்து ரூ.1,490 ஆக அதிகரித்துள்ளது.

ஐந்து பேர் பகிரக்கூடிய குடும்பத் திட்டத்தை YouTube Premium மாதம் ரூ.189 ஆக இருந்தது. அது தற்போது 299 ஆக உயர்ந்து உள்ளது. விலை 58 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாணவர் மாதத் திட்டம் இதுவரை ரூ.79 ஆக இருந்த நிலையில், ரூ.89 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 12.6 சதவீதம் விலை உயர்வாகும்.

விலை உயர்வு தொடர்பாக YouTube ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு இ-மெயில் அனுப்பத் தொடங்கியுள்ளது. சந்தாவைத் தொடர பயனர்கள் புதிய கட்டணங்களை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிரீமியம் சந்தா எடுத்தால் கிடைக்கும் நன்மை

YouTube பிரீமியம் சந்தாவை எடுத்தால் விளம்பரம் இல்லாத ஸ்ட்ரீமிங் கிடைக்கும். 1080p தெளிவுத்திறனில் அதிக-பிட்ரேட் ஸ்ட்ரீமிங் செய்யலாம். ஆஃப்லைன் பதிவிறக்கம், பின்னணி பிளேபேக், யூடியூப் மியூசிக் ஆப் வசதியில் விளம்பரம் இல்லாத பாடல் ஸ்ட்ரீமிங் போன்ற நன்மைகள் கிடைக்கும்

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இரண்டு ஸ்கிரீன்.. தரமான கேமரா! லாவா பிளேஸ் டியோ 3 அமேசான் தளத்தில் சிக்கியது! கம்மி விலையில் ஒரு மெகா லான்ச்
  2. "ஸ்லோ டிவி" பிரச்சனைக்கு எண்டு கார்டு! 4K QLED மற்றும் Mini LED வசதியுடன் Lumio டிவிகள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தாச்சு
  3. பவர்ஃபுல் போன்.. பட்ஜெட் விலை! Flipkart-ல் Redmi Note 14 Pro Plus மீது அதிரடி விலைக்குறைப்பு! உடனே முந்துங்கள்
  4. எந்த போன் வாங்கலாம்னு குழப்பமா இருக்கா? இதோ அமேசான் சேல் 2026-ன் டாப் 10 மொபைல் டீல்கள்! விலை மற்றும் ஆஃபர் விவரங்கள் உள்ளே
  5. ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் வாங்க இதுவே சரியான நேரம்! அமேசான் ரிபப்ளிக் டே சேலில் Samsung மற்றும் OnePlus சாதனங்களுக்கு மெகா ஆஃபர்
  6. S25 போன் வச்சிருக்கீங்களா? ஜனவரி அப்டேட்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சாம்சங் செய்யப்போகும் மெகா மாற்றங்கள்
  7. கையில வாட்ச்.. காதுல பட்ஜ்.. பட்ஜெட்டுக்குள்ள ஆஃபர்ஸ்! அமேசான் ரிபப்ளிக் டே சேல் 2026 - அதிரடி வேரபிள் டீல்கள் இதோ
  8. ஷாட்டா சொல்லப்போனா.. "விலை குறைப்பு திருவிழா!" அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 - டாப் டீல்கள் இதோ
  9. Apple MacBook முதல் Gaming Laptops வரை - அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு! எதை வாங்கலாம்? முழு விவரம் இதோ!
  10. பட்ஜெட் விலையில் ஒரு பிரீமியம் Samsung போன்! Galaxy A35 விலையில் ₹14,000 சரிவு! இப்போவே செக் பண்ணுங்க
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »