ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் புகார்களை தீர்க்க அதிகாரி ஒருவரை இந்திய சேவைகளுக்கு நியமித்துள்ளன. ஆனால், வாட்ஸாப் அதனை செய்யவில்லை என்று கூறியுள்ளது.
வாட்ஸாப் நிறுவனம் தொடங்கியுள்ள பேமெண்ட் சேவையை நிறுத்த உத்தரவிடுமாறு, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகளை முழுமையாக பின்பற்றாத வரை அனுமதிக்கக் கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கும், வாட்ஸாப் நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
அக்கவுண்டபிளிட்டி மற்றும் சிஸ்டமிக் சேஞ் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், வாட்ஸாப் பேமென்ட் சர்வீஸ் கே.ஒய்.சி மற்றும் புகார்களை தீர்த்து வைக்கும் அதிகாரி, ஆகியோர் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் புகார்களை தீர்க்க அதிகாரி ஒருவரை இந்திய சேவைகளுக்கு நியமித்துள்ளன. ஆனால், வாட்ஸாப் அதனை செய்யவில்லை என்று கூறியுள்ளது.
வாட்ஸாப் ஒரு வெளிநாட்டு நிறுவனம். இந்தியாவில் பேமென்ட் சேவை தொடங்க வேண்டும் என்றால், இந்தியாவில் அலுவலகம் இருக்க வேண்டியது அவசியம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸாப்பை 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள், பேமென்ட் சேவையை சோதித்து வருகின்றனர்.
இவ்வளவு பெரிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கொண்ட் வாட்ஸாப் நிறுவனத்தை புகாருக்காக தொடர்பு கொள்ள ஒரு சேவை எண் கூட இல்லை என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Magnetic Control of Lithium Enables Safer, High-Capacity “Dream Battery” Without Explosion Risk