பிபிடி தலைவர் கெனிச்சி ஓமே 'நியூமி' ரோபோக்களுடன் இணைக்கப்பட்ட ஐபாட்களுடன் போஸ் கொடுக்கிறார்
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஜப்பானில் பட்டமளிப்பு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒரு பள்ளியில், மாணவர்கள் வீட்டில் இருந்தே ரோபோவை கட்டுபடுத்தி, சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் தொலைதூரத்தில் இருந்து கலந்து கொண்டனர்.
டோக்கியோவில் உள்ள பிசினஸ் பிரேக்ரட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், "நியூமி" என்ற 4 ரோபோக்கள் மட்டுமே பட்டமளிப்பு தொப்பிகள் மற்றும் அங்கிகளை அணிந்திருந்தன. அந்த ரோபோக்களின் "முகங்களில்" டேப்லெட் வைத்து, அதன் மூலம் 4 பட்டதாரிகளும் இணைந்திருந்தனர். இதனால் ரோபோக்களும் தொற்றுநோயிலிருந்து சமூக தூரத்தை பயிற்சி செய்ய முடியும்.
ரோபோக்கள் டிப்ளோமோ பட்டம் பெறுவதற்காக மேடைக்கு செல்லும் போது, பள்ளி ஊழியர்கள் கைதட்டி, "வாழ்த்துக்கள்!" தெரிவித்தனர். பல்கலைக்கழகத் தலைவர் கெனிச்சி ஓமே (Kenichi Ohmae), சான்றிதழ்களை ரோபோவின் நடுப்பகுதியில் வைத்தார். இந்த ரோபோக்களை, மாணவர்கள் வீட்டில் இருந்து மடிக்கணினிகள் மூலம் கட்டுப்படுத்தினர்.
"ரோபோக்கள் மூலம் சான்றிதழ் பெறுவது உண்மையிலேயே ஒரு புதிய அனுபவம்" என்று கசுகி தமுரா (Kazuki Tamura) முதுகலை பட்டப்படிப்பு டிப்ளோமா பெறும் போது கணினி வழியாக கூறினார்.
வைரஸ் தொற்றால், கூட்டங்களைத் தவிர்க்க மற்ற பள்ளிகளும் இந்த அணுகுமுறையை பின்பற்றும் என்று பல்கலைக்கழகம் நம்புகிறது.
© Thomson Reuters 2020
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்