Photo Credit: Amazon
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Republic Day sale 2025 விற்பனை பற்றி தான்.
Amazon Great Republic Day sale 2025 விற்பனை தொடங்கும் தேதி வெளியாகி இருக்கிறது. சிறப்பு தள்ளுபடி விற்பனை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே விற்பனை தொடங்கும். அமேசான் ஆண்டு விற்பனையின் போது ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் புரொஜெக்டர்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்குகிறது. பிற மின்னணு பொருட்கள், அமேசான் சாதனங்கள், மடிக்கணினிகள், பேஷன் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் மற்றும் பலவற்றின் விற்பனையின் போது விலைக் குறைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Amazon Great Republic Day sale 2025 ஜனவரி 13 அன்று மதியம் தொடங்குகிறது. பிரைம் பயனர்களுக்கு 12 மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கும் . விற்பனையின் இறுதி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI மாற்றங்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க அமேசான் SBI உடன் கைகோர்த்துள்ளது. பயனாளர்கள் ICICI Amazon Pay கிரெடிட் கார்டு அடிப்படையிலான சலுகைகள், பரிமாற்றத் தள்ளுபடிகள் மற்றும் விற்பனையின் போது கூப்பன் தள்ளுபடிகள் ஆகியவற்றையும் பெறலாம்.
Apple , OnePlus , Samsung , iQoo , Realme மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகளின் மொபைல் போன்களுக்கு 40 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. Amazon இ-காமர்ஸ் இணையதளம் பிரத்யேக மைக்ரோசைட் மூலம் சில முக்கிய சலுகைகளை வெளியிட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 13 , OnePlus 13R , iQOO 13 5G , iPhone 15 மற்றும் Samsung Galaxy M35 5G ஆகியவை விலைக் குறைப்புகளைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Honor 200 5G , Galaxy S23 Ultra , Realme Narzo N61 மற்றும் Redmi Note 14 5G ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
மேலும் ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் புரொஜெக்டர்கள் மீது 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், மவுஸ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாகங்கள் ரூ. 199 விலையில் தொடங்குகிறது. அமேசானின் அலெக்சா மற்றும் ஃபயர் டிவி தயாரிப்புகள் ரூ.2,599க்கு ஆரம்பம் ஆகிறது. Amazon Pay மூலம் செய்யப்படும் பயண முன்பதிவுகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்