1998 OR2 என பெயரிடப்பட்ட இந்த விண்கல்லை நாசா தற்போது கண்காணித்து வருகிறது.
Photo Credit: JPL / NASA
1998 OR2 விண்கல் 13,500 அடி விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது
விண்கற்கள் - விண்வெளியில் மிதக்கும் பாறைகள். அவற்றில் ஒன்று பூமியைத் தாக்கி டைனோசர்களைத் துடைத்ததை நினைவில் உள்ளதா? அதுபோன்ற மற்றொரு பெரிய விண்கல் பூமியின்மீது மோதும் அபாயத்தில் உள்ளது, மேலும் அதன் சுற்றளவு காரணமாக பெரும் அழிவு ஏற்படலாம். 1998 OR2 என பெயரிடப்பட்ட இந்த விண்கல்லை நாசா தற்போது கண்காணித்து வருகிறது. இந்த விண்கல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பூமியின்மீது பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, தற்போது இந்த விண்கல் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது, அதாவது சில முரண்பாடான காரணிகள் செயல்படாவிட்டால் அது பூமியை கடந்து சென்றுவிடும்.
1998 OR2 விண்கல் 13,500 அடி விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 29, 2020 அன்று அதிகாலை 5:56 மணிக்கு EDT (3:26 பிற்பகல் IST) பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நாசாவின் அருகிலுள்ள பூமி பொருள் ஆய்வுகளுக்கான மையம் (CNEOS) தெரிவித்துள்ளது. பூமிக்கு மிக நெருக்கமாக, இந்த விண்கல் சுமார் 0.04205 வானியல் அலகுகள் அல்லது பூமியின் மையத்திலிருந்து 3.9 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும். பாதுகாப்பானதாகத் தெரிகிறது, இல்லையா? ஓரிரு நிகழ்வுகள் காரணமாக விண்கல்லின் போக்கை மாற்ற முடியும், அது இறுதியில் பூமியில் மோத வாய்ப்பாக அமையலாம்.
முதலாவது யர்கோவ்ஸ்கி விளைவு (Yarkovsky effect), வெளிப்புற அல்லது உட்புறமாக உருவாக்கப்படும் கதிர்வீச்சின் காரணமாக உடலின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஒரு வான உடலில் செலுத்தப்படும் விளைவு சக்தியாக வரையறுக்கப்படுகிறது. இது விண்கல்களின் அச்சை பாதிக்கும் என்று அறியப்படுகிறது. இது 1998 OR2 விண்கல்லின் சுழற்சியையும் பாதிக்கக்கூடும், இறுதியில் அதன் சுற்றுப்பாதையும் பூமியை நோக்கி திரும்பலாம். இந்த விண்கல் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றிய ஒரு கருத்தைத் தருவதற்கு, இந்த விண்கல் அறியப்படும் பிரகாசமான மற்றும் மிகப்பெரிய அபாயகரமான விண்கற்களில் ஒன்று.
இந்த பாதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் இரண்டாவது காரணி பேரழிவு விண்கல் மோதல் நிகழ்வு (catastrophic asteroid collision event). இது ஈர்ப்பு விசையால் ஏற்படும் பாதை இடையூறு ஆகும். இது ஒரு கிரகத்தைச் சுற்றியுள்ள விண்வெளியில் ஒரு சிறிய பகுதி என்று விவரிக்க முடியும், அங்கு கிரகத்தின் ஈர்ப்பு ஒரு விண்கல் போன்ற கடந்து செல்லும்போது இடஞ்சார்ந்த உடலின் சுற்றுப்பாதையை மாற்றி அதை உள்நோக்கி இழுத்து மோதலுக்கு வழிவகுக்கிறது. 1998 OR2-வால் ஏற்படும் டெக்டோனிக் சேதத்தைத் தவிர, இதன் தாக்கம் கிரகத்தின் வானிலை மற்றும் வளிமண்டல நிலைமைகளையும் கடுமையாக மாற்றிவிடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket