மேலும் இந்த பாடத்திட்டத்தில் 3D வடிவமைப்பு, விர்ச்சுவல் ரியலிட்டி மற்றும் தகவல் ஆய்வு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட்டின் கல்வி பிரிவு நாசாவுடன் இணைந்து, வின்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு புதிய வாகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
'மைகிரோ கிராவிட்டியிலிருந்து வின்வெளி வீரர்களின் கால்களை பாதுகாக்க சாக்ஸ்களை எப்படி தயாரிப்பது?' என்ற தலைப்பில் துவங்கி, 8 தலைப்புகளில் வீடியோ பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
மேலும் இந்த பாடத்திட்டத்தில் 3D வடிவமைப்பு, விர்ச்சுவல் ரியலிட்டி மற்றும் தகவல் ஆய்வு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாடத்திட்டத்தில், அனைத்து தலைப்புகளிலும் 50 நிமிடங்கள் அளவிலான மூன்று அல்லது நான்கு வகுப்புகள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு தலைப்பிலும் வகுப்புகள் 2 முதல் 3 டாலர்கள் (140 ரூபாய் முதல் 210 ரூபாய் ) வரையிலான விலைகளில் கிடைக்கப்பெரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை பற்றிய அறிவை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையிலேயே இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2018-ல் நடந்த சர்வதேச தொழில்நுட்ப கல்வியாளர்கள் சமூக மாநாட்டில் நடந்த சந்திப்பின் விளைவாக இந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் கல்வி பிரிவின் கூட்டாளர் இயக்குனரான காரோன் வெப்பர் (Karon Weber) கூறியுள்ளார்.
இந்த பாடத்திட்டத்தை பயில மாணவர்கள் வின்டோஸ் 10 மற்றும் மைக்ரோசாப்ட் ஆப்பிஸின் சந்தாவை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பிபிசியுடன் இணைந்து இதே மாதிரியான திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Partners AU Small Finance Bank to Add Tap & Pay Support For AU Visa Credit Cards