சந்திரனை சந்திக்குமா சந்தியரயான்-3...? திட்டத்தை தொடங்கிய இஸ்ரோ!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
சந்திரனை சந்திக்குமா சந்தியரயான்-3...? திட்டத்தை தொடங்கிய இஸ்ரோ!

விண்வெளி நிறுவனம், சந்திரயான்-2 திட்டத்தில் 960 கோடி ரூபாய் செலவு செய்தது

ஹைலைட்ஸ்
 • இந்தியா தனது மூன்றாவது சந்திர திட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது
 • இது 2021-ன் தொடக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
 • சந்திரனில் இறங்குவதற்கான முதல் முயற்சி கடந்த ஆண்டு தோல்வியடைந்தது

இந்தியா தனது மூன்றாவது சந்திர திட்டமான சந்திரயான்-3-ல் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரு உயர் விண்வெளி அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். இது, சந்திரனில் மென்மையாக இறங்குவதற்கான இரண்டாவது முயற்சியாகும். ஜனவரி 1-ம் தேதி, பெங்களூரில் ஊடகங்களுக்கு சிவன் கூறியதாவது, 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலம் மற்றும் ஒரு ரோவரை மென்மையாக தரையிறக்கும் லட்சிய பணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, என்றார்.

"சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கும் எங்கள் மூன்றாவது சந்திர திட்டத்தில், நாங்கள் பணியாற்றத் தொடங்கினோம். 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லேண்டர் மற்றும் ரோவரை ஏவுவதற்கான திட்டப்பணி, வேகமடைந்துள்ளது" என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் ஒரு விண்வெளி நிகழ்வில் கூறினார்.

சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான-தரையிறங்க இந்தியாவின் முதல் முயற்சி, செப்டம்பர் 7, 2019 அன்று தோல்வியடைந்தது. (failed on September 7, 2019) சந்திரயான்-2 விக்ரம் விண்கலம் தரையிறங்கும் போது, வேகத்தடுமாற்றத்தால் விபத்துக்குள்ளானது.

"சந்திரயான்-3-க்கு ஒரு லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே இருக்கும் என்பதால், சந்திர விண்கலத்திற்கு ரூ. 610 கோடி செலவாகும், இதில் ஏவுதள ராக்கெட்டுக்கு ரூ. 360 கோடி அடங்கும்" என்றும், ஒரு சிம்போசியத்தின் ஓரங்களில் "மனித விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வு - தற்போதய சவால்கள் மற்றும் எதிர்கால போக்குகள்" என்று சிவன் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் சந்திர மேற்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் சந்திரனைச் சுற்றி ஒரு நீள்வட்ட இயக்கத்தின் போது, விண்வெளி நிறுவனம், சந்திரயான்-2 திட்டத்தில் 960 கோடி ரூபாய் செலவு செய்தது.  

இந்தியாவின் முதல் மனிதர் திட்டம் 'ககன்யான்' குறித்து சிவன் கூறுகையில், நான்கு இந்திய விமானப்படை (IAF) விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் குழுவினராக விரைவில் ரஷ்யாவுக்குச் சென்று பயிற்சி பெறுவார்கள்.

"ககன்யான் நாட்டிற்கான ஒரு வரலாற்றுப் திட்டமாக இருக்கும், ஏனெனில் மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட விண்வெளி விண்கலத்தில் பறப்பார்கள்" என்று ராக்கெட் நிபுணர் சிவன் வலியுறுத்தினார்.

ஏப்ரல் 2, 1984 அன்று ரஷ்ய சோயுஸ் -11 (Russian Soyuz-11) பயணத்தில் விண்வெளியில் பறந்த முதல் இந்தியர், முன்னாள் ஐ.ஏ.எஃப் விங் கமாண்டர் ராகேஷ் சர்மா (IAF Wing Commander Rakesh Sharma) ஆவார்.

ரஷ்யாவிலிருந்து திரும்பும்போது, ​​இந்த தொழில்நுட்ப நகரத்தில் உள்ள விண்வெளி ஏஜென்சியின் மனித விண்வெளி விமான மையத்தில் IAF குவார்டெட் தொகுதி-குறிப்பிட்ட பயிற்சிக்கு உட்படும், அங்கு விண்வெளி பயணங்களுக்கான முக்கியமான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.

"நான்கு விமானிகளுக்கும் எங்கள் குழு மற்றும் சேவை தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக, அவர்களில் மூன்று பேர் பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 7 நாள் விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்" என்று சிவன் கூறினார்.

மனிதனால் மேற்கொள்ளப்பட்ட திட்டம், ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஒரு சாதனையோ அல்லது பயிற்சியோ அல்ல என்று, இஸ்ரோ தலைவர் கூறினார்: "ககன்யான் ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது மட்டுமல்ல. ஆனால், மற்ற விண்வெளி பயண நாடுகளுடன் தேசிய மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகும்.

"விஞ்ஞான கண்டுபிடிப்புகள், பொருளாதார மேம்பாடு, கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஊக்கமளிக்கும் இளைஞர்கள் ஆகியவை எல்லா நாடுகளுக்கும் பொதுவான குறிக்கோள்களாகும். மனித விண்வெளி விமானத் திட்டம் அத்தகைய நோக்கங்களை பூர்த்தி செய்ய ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது."

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ரெட்மி 8 மொபைல் விலை மீண்டும் உயர்ந்தது! செல்போன் பிரியர்கள் அதிர்ச்சி
 2. 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வீவோ Y30 மொபைல் வெளியீடு!
 3. zoom-க்கு மாற்றாக இலவச வீடியோ கான்பரன்சிங் App-ஐ வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!
 4. அட்டகாசமான வசதிகளுடன் எம்ஐ லக்ஸ் 65-இன்ச் 4k எல்இடி டிவி அறிமுகம்! விலை தெரியுமா?
 5. டிக் டாக் மாற்றான இந்திய செயலி ’சிங்காரி’: 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம்!
 6. ரூ. 2,399 ரீசார்ஜ் - 600 நாட்கள் வேலிடிட்டி! BSNL-ன் அட்டகாசமான ஆஃபர்
 7. சாம்சங் ஃப்ளிப் மாடல் மொபைல் விலை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைப்பு!
 8. விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?
 9. ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை தொடக்கம்; விலை, ஆஃபர் விவரம்!
 10. சாம்சங் கேலக்ஸி ஏ31 விலை அதிரடி குறைப்பு! சிறப்பு சலுகைகள் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com