விண்வெளியின் கருந்துளையில் இருந்து அதிக ஆற்றலுடன் கூடிய X-Ray கதிர்கள் சீரற்ற நிலையில் வெளியேறுவதை இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டறிந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப்டம்பர் 28ல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் X-Ray கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு அஸ்ட்ரோசாட் அனுப்பப்பட்டது. இது சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரிய படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. அஸ்ட்ரோசாட் விண்கலம் மூலம் கிடைக்கப் பெற்ற தரவுகளை பெங்களூர் UR.ராவ் செயற்கைக்கோள் மையம், கவுகாத்தி ஐஐடி, மும்பை பல்கலைக்கழகம் மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு வந்தன. அதில் கருந்துளையின் Swift J0243.6+6124 என்ற பகுதியில் இருந்து அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் சீரற்ற நிலையில் வெளியாவது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுவாக கருந்துளை என்பது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தீவிர ஈர்ப்பு விசையை கொண்டதாகும். அதனுள் ஏதேனும் பெருவெடிப்பு நடக்கும் போது போட்டான் கூறுகள் வெளியேறி எக்ஸ் கதிர்கள் உருவாகும். அதன்படி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 முதல் 13ம் தேதி வரையான காலத்தில் 1.4 ஹெட்ஸ் முதல் 2.4 ஹெட்ஸ் வரை சீரற்ற எக்ஸ் கதிர் போட்டான் வெளியேற்றம் நடந்துள்ளது.
X-ray emitting pulsar மூலம் வெளிப்படும் எக்ஸ்-கதிர்களின் துருவமுனைப்பு பகுதியில் எதிர்பார்த்ததை விட கணிசமாகக் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு பெரிய நட்சத்திரம் அது எரியக்கூடிய தன்மையை முழுவதுமாக வெளியேற்றி அதன் சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் சரிந்து, அதன் மையத்தை சுருக்கி, புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை நியூட்ரான்களாக மாற்றும் போது நியூட்ரான் நட்சத்திரங்கள் உருவாகின்றன.
அப்போது நட்சத்திர மையத்தின் நிறை சூரியனை விட ஒன்று முதல் மூன்று மடங்கு வரை இருந்தால் சரிவு நின்று நியூட்ரான் நட்சத்திரத்தை உருவாக்குகிறது. இந்த நம்பமுடியாத அடர்த்தியான பொருட்கள் சூரியனைப் போன்ற அடர்த்தி கொண்டவை. ஆனால் அவை ஒரு நகரத்தின் அளவிற்கு சுருக்கப்படும்.
பல நியூட்ரான் நட்சத்திரங்கள் X-ray emitting pulsar வடிவில் காணப்படுகின்றன. அவை சுழலும் போது வழக்கமான கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. எக்ஸ்ரே பல்சர்கள் என்பது ஒரு குறிப்பிட்ட வகை நியூட்ரான் நட்சத்திரமாகும். அதிக காந்தமயமாக்கப்பட்ட நியூட்ரான் இந்த நட்சத்திரத்தை சுற்றி வருகிறது, இது எக்ஸ்-கதிர்களின் ஆற்றலை வெளியிடுகிறது. Swift J0243.6+6124 பகுதியில் கடந்த 2017-2018 இல் வலுவான எக்ஸ்ரே வெடிப்பு நாசாவின் ஸ்விஃப்ட் விண்கலத்தால் கண்டறியப்பட்டது.
ஸ்விஃப்ட் J0243.6+6124 இலிருந்து X-கதிர்களின் துருவமுனைப்பு எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாக இருந்தது. இது சுமார் 3% என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எக்ஸ்-கதிர்களில் குறைந்த துருவமுனைப்பு கண்டுபிடிப்பு இப்போது முக்கியமான கண்டுபிடிப்பாக மாறியுள்ளது. நட்சத்திரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. இந்த ஆச்சரியமான முடிவு தற்போதைய கோட்பாடுகளை சவால் செய்கிறது மற்றும் மேலும் ஆய்வுக்கு புதிய கேள்விகளை எழுப்புகிறது. இது நமது விண்மீன் மண்டலத்திலும் அதற்கு அப்பாலும் இதே போன்ற எக்ஸ்ரே மூலங்களைப் படிப்பதற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்