Photo Credit: ISRO
இந்தியாவின் 'பாகுபலி' என்ற புனைப்பெயர் கொண்ட ஹெவி-லிப்ட் ராக்கெட்டான 'ஜி.எஸ்.எல்.வி மார்க்-3' தன் பயணியான 'சந்திராயன்-2' செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு ஜூலை 15-ல் நிலவிற்கு பறக்கவுள்ளது. இந்த தகவலை விண்வெளி நிறுவனத்தின் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
'ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜூலை 15 அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதற்காக பரபரப்பாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.' என ஏவப்படும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு, இஸ்ரோவின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
375 கோடி மதிப்பிலான இந்த 'ஜி.எஸ்.எல்.வி மார்க்-3', 16 நிமிடங்களில் 'சந்திராயன்-2' செயற்கைக்கோளை, அதன் சுற்றுவட்ட பாதைக்குள் செலுத்திவிடும்.
640 டன் எடையுள்ள இந்த 'ஜி.எஸ்.எல்.வி மார்க்-3' ஹெவி-லிப்ட் ராக்கெட்டை இஸ்ரோ அதிகாரிகள் 'ஃபேட் பாய்' (Fat Boy) என அழைக்கிறார்கள். தெழுங்கு செய்தி நிறுவனங்களோ, இந்த ராக்கெட்டிற்கு 'பாகுபலி' என பெயர் சூட்டியுள்ளனர்.
இஸ்ரோவின் தகவலின்படி, 'சந்திராயன்-2' செயற்கைக்கோள், பூமியின் 170x40400 கிமீ சுற்றுவட்ட பாதைக்குள் செலுத்தப்படவுள்ளது.
603 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த 'சந்திராயன்-2' செயற்கைக்கோள் முன்று பகுதிகளை கொண்டுள்ளது. ஆர்பிட்டார் (Orbiter), லேண்டெர் - விக்ரம் (Lander-Vikram) மற்றும் ரோவர் - பிரக்யான் (Rover Pragyaan)
இந்தியாவில் விண்வெளித்துறை முன்னோடியான விக்ரம் சரபாய் அவரின் நினைவாக, 'சந்திராயன்-2'-ன் லேண்டெருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமஸ்கிருதத்தில் பிரக்யானிற்கு அறிவு என்று பொருள்.
இந்த செயற்கோள் நிலவின் பரப்பிற்குள் சென்றவுடன் நிலவை புகைப்படம் எடுக்க சற்று வேகத்தை குறைத்துக்கொள்ளும்.
ஆர்பிட்டார் 8 அறிவியல் சோதனைகளுடன், நிலவை சுற்றி ஒரு வருடத்திற்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளது.
மேலும், ஆர்பிட்டாரிலிருந்து பிரிந்த லேண்டெர், செப்டம்பர் 6, 2019-ல் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லேண்டெரில் உள்ள ரோவர், 14 நாட்கள் நிலவை ஆய்வு செய்யவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்