இஸ்ரோ: மனிதனுக்கு முன்பே விண்வெளி செல்லும் 'வியோம் மித்ரா'...! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இஸ்ரோ: மனிதனுக்கு முன்பே விண்வெளி செல்லும் 'வியோம் மித்ரா'...! 

இஸ்ரோவின் அரை மனித உருவமான 'வியோம் மித்ரா' முதல் ஆளில்லா திட்டத்தில் வைக்கப்படும்

ஹைலைட்ஸ்
 • 'வியோம் மித்ரா' இஸ்ரோவின் அரை மனித உருவமாகும்
 • ககன்யான், விண்வெளி வீரர்களுடன் செல்வதற்கு முன்பு, ஒரு சோதனையாக செல்லும்
 • விண்வெளி வீரர்களை அனுப்புவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும்

"ககன்யான்" திட்டத்தில் விண்வெளி வீரர்கள் செல்வதற்கு முன்பு, சோதனைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) அரை மனித உருவம் 'வியோம் மித்ரா' விண்வெளிக்கு செல்லும். இஸ்ரோவில், இந்தியா அதன் முதல் மனித விண்வெளி திட்டத்திற்காக, அரை மனித உருவமான 'வியோம் மித்ரா' என்ற ரோபோவை வெளியிட்டது. ககன்யான் திட்டத்திற்கு விண்வெளி வீரர்கள் செல்வதற்கு முன், மனித உருவத்தின் இந்த முன்மாதிரி சோதனை செய்யப்படும் என்று, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் (Jitendra Singh) 31 விநாடி வீடியோவை ட்வீட் செய்து எழுதினார்."

ககன்யான் திட்டம், ஒரு சுற்றுப்பாதை விண்கலத்தில், விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இஸ்ரோவின் அரை மனித உருவமான வியோம் மித்ரா 'ககன்யான்'-ன் கீழ் முதல் ஆளில்லா திட்டத்தில் வைக்கப்படும். மேலும். இது மனித உடலின் பெரும்பாலான செயல்பாடுகளை உருவகப்படுத்தும்.

ANI உடன் பேசியபோது, ​​"கால்கள் இல்லை. இது ஒரு மனிதனை உருவகப்படுத்தி எங்களிடம் புகாரளிக்க முயற்சிக்கும். இதை நாங்கள் ஒரு பரிசோதனையாக செய்கிறோம்" என்று இஸ்ரோ விஞ்ஞானி சாம் தயால் (Sam Dayal) கூறினார்.

ஒரு நிகழ்வில் இங்குள்ள பார்வையாளர்களுக்கு முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்திற்காக, அரை மனித உருவத்தின் முன்மாதிரியாக, வியோம் மித்ரா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.

"அனைவருக்கும் வணக்கம், நான் வியோம் மித்ரா. முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட, அரை மனித உருவத்தின் முன்மாதிரி. சில தொகுதி அளவுருக்களை என்னால் கண்காணிக்க முடியும், உங்களை எச்சரிக்கலாம், மற்றும் வாழ்க்கை ஆதரவு நடவடிக்கைகளை செய்ய முடியும்" என்று ரோபோ கூறுகிறது.

ககன்யான் திட்டத்திற்காக, நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷ்யாவுக்குச் சென்று பயிற்சியை தொடங்க உள்ளனர் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் புதன்கிழமை (நேற்று) தெரிவித்தார்.

மேலும், 1984-ஆம் ஆண்டில், ராகேஷ் சர்மா (Rakesh Sharma) ரஷ்ய விண்கலத்தில் பறந்தார். ஆனால், இந்த முறை இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவில் இருந்து இந்திய விண்கலத்தில் பறப்பார்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நான்கு விண்வெளி வீரர்களும் 11 மாதங்களுக்கு பயிற்சி பெறுவார்கள். இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் ஆண்கள் ஆவர். ஆனால், அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் (MoS) ஜிதேந்திர சிங் முன்பே கூறியிருந்தார்.

ரஷ்யாவில் 11 மாத பயிற்சிக்குப் பிறகு, விண்வெளி வீரர்கள் இந்தியாவில் தொகுதி சார்ந்த பயிற்சி பெறுவார்கள். அவர்கள் இஸ்ரோ வடிவமைத்த குழு மற்றும் சேவை தொகுதிகளில் பயிற்சியளிக்கப்படுவார்கள். அதை இயக்க கற்றுக்கொள்வார்கள், அதைச் சுற்றி வேலை செய்வார்கள் மற்றும் உருவகப்படுத்துதல்களைச் செய்வார்கள். இஸ்ரோ வட்டாரங்களின்படி, இந்தியாவின் மிகப்பெரிய ஏவுகணை வாகனம் "Bahubali" GSLV Mark-III, விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும்.

நரேந்திர மோடி அரசு, ககன்யான் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கியது. இந்த வெளியீடு 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டுடன் ஒத்துப்போகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ரெட்மி 8 மொபைல் விலை மீண்டும் உயர்ந்தது! செல்போன் பிரியர்கள் அதிர்ச்சி
 2. 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வீவோ Y30 மொபைல் வெளியீடு!
 3. zoom-க்கு மாற்றாக இலவச வீடியோ கான்பரன்சிங் App-ஐ வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!
 4. அட்டகாசமான வசதிகளுடன் எம்ஐ லக்ஸ் 65-இன்ச் 4k எல்இடி டிவி அறிமுகம்! விலை தெரியுமா?
 5. டிக் டாக் மாற்றான இந்திய செயலி ’சிங்காரி’: 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம்!
 6. ரூ. 2,399 ரீசார்ஜ் - 600 நாட்கள் வேலிடிட்டி! BSNL-ன் அட்டகாசமான ஆஃபர்
 7. சாம்சங் ஃப்ளிப் மாடல் மொபைல் விலை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைப்பு!
 8. விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?
 9. ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை தொடக்கம்; விலை, ஆஃபர் விவரம்!
 10. சாம்சங் கேலக்ஸி ஏ31 விலை அதிரடி குறைப்பு! சிறப்பு சலுகைகள் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com