'ககன்யான்' திட்டம் புதிய இந்தியாவுக்கு மைல்கல்லாக இருக்கும் - பிரதமர் மோடி! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
'ககன்யான்' திட்டம் புதிய இந்தியாவுக்கு மைல்கல்லாக இருக்கும் - பிரதமர் மோடி! 

Photo Credit: Twitter/ Narendra Modi

நரேந்திர மோடி அரசு ககன்யான் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கியுள்ளது

ஹைலைட்ஸ்
 • ககன்யான் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்: பிரதமர் மோடி
 • இந்த திட்டத்திற்காக, விமானப்படையின் 4 விமானிகள் பட்டியலிடப்படுள்ள
 • அவர்கள், திட்டத்திற்கான பயிற்சிக்காக ரஷ்யாவுக்குச் செல்வார்கள்

'ககன்யான்' திட்டம் 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு வரலாற்று சாதனையாகவும், புதிய இந்தியாவுக்கு ஒரு மைல்கல்லாகவும் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

"குடியரசு தினத்தின் புனிதமான சந்தர்ப்பத்தில், 'ககன்யான்' பற்றி உங்களுக்குச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த இலக்கை நோக்கி நாடு மற்றொரு படி எடுத்துள்ளது. 2022-ஆம் ஆண்டில், 75-ஆவது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுவோம். அந்த சந்தர்ப்பத்தில், ககன்யான் திட்டம் மூலம் ஒரு இந்தியரை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்,” என்று மோடி தனது முதல் 'மான் கி பாத்' உரையில் கூறினார்.

"ககன்யான் திட்டம் 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். மேலும், இது புதிய இந்தியாவுக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

இந்திய விமானப்படையின் நான்கு விமானிகள் இந்த திட்டத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இந்த திட்டத்திற்கான, பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு செல்வார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.

"விண்வெளி வீரர்களாக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரும் இந்திய விமானப்படையின் விமானிகள் ஆவர். இந்த திறமையான இளைஞர்கள் இந்தியாவின் திறன்கள், திறமை, திறன், தைரியம் மற்றும் கனவுகளின் அடையாளங்கள். அவர்கள் விரைவில், அடுத்த சில நாட்களில் ரஷ்யாவுக்கு பயிற்சி பெறுவார்கள்," என்று மோடி கூறினார்.

இந்த திட்டம், ரஷ்யாவுடன் நெருக்கமான மற்றும் ஆழமான உறவுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

"இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் மற்றொரு பொன்னான அத்தியாயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு, தேசத்தின் நம்பிக்கைகளையும் ஆவலையும் சுமந்து விண்வெளியில் செல்லும் பொறுப்பு அவர்களில் ஒருவரின் தோள்களில் இருக்கும். குடியரசு தினத்தின் நல்ல சந்தர்ப்பத்தில், இந்த நான்கு இளைஞர்களையும், இந்த திட்டத்துடன் தொடர்புடைய இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களையும் வாழ்த்துகிறேன்," என்று அவர் கூறினார்.

நரேந்திர மோடி அரசு ககன்யான் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வெளியீடு 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் 75-ஆவது சுதந்திரத்தின் ஆண்டுடன் ஒத்துப்போகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ரியல்மி பட்ஸ் ஏர் நியோ இந்தியாவில் அறிமுகம்!
 2. ரியல்மியின் 10000 எம்ஏஎச் பவர் பேங் 2 அறிமுகம்! 
 3. ரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.12,999 மட்டுமே!!
 4. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?
 5. ரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது!
 6. 48 மெகாபிக்சல் டிரிபிள் கேமராக்களுடன் Huawei Enjoy Z 5G அறிமுகம்!
 7. இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் மே 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்!
 8. ஷாவ்மியின் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!
 9. விவோ ஒய் 70 எஸ் விவோவின் அடுத்த 5 ஜி போனா இருக்கும்!
 10. வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com