நிலவின் மறுபக்கம், மலைகள் நிறைந்ததாகவும், மிகவும் கரடுமுரடாக உள்ளது.
Photo Credit: CNSA via CNS/ AFP
நிலவின் மறுபக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளும் யுடு-2 ரோவர்
நிலவின் மறுபக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் முடிவுகளை புதங்கிழமையன்று வெளியிட்ட ஆராய்ச்சியாளர், இந்த ஆய்வின் முடிவுகள், நிலவு எப்படி உருவானது என்ற புதிருக்கான விடையை நோக்கி ஒரு அடி முன் செல்வதற்கு உதவும் என குறிப்பிட்டுள்ளனர். சீனாவின் புராணங்களில் நிலவுக்கடவுள் என்று கருதப்படும், செங்(Chang'e), என்ற கடவுளின் பெயர் வைத்து, கடந்த ஜனவரி மாதம், விண்ணிற்கு அனுப்பப்பட்ட சீன விண்கலமான செங் 4(Chang'e 4) என்னும் விண்கலம் தான் நிலவின் மறுபக்கத்தில் கால் பதித்துள்ள முதல் விண்கலம் என்ற பெயரை பெற்றுள்ள முதல் விண்கலம். இந்த விண்கலம், முதலில் பூமிலிருந்து, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி விண்ணிற்கு ஏவப்பட்டது. டிசம்பர் 12 அன்று நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற இந்த விண்கலம், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ஆம் நாள் நிலவில் தரையிறங்கியது.
முன்னதாக சூரிய குடும்பத்திலுள்ள மற்ற கோள்களை போன்றே, இந்த நிலவும் சில கட்டங்களுக்கு உள்ளாகி, ஒரு கோளாக உருவாகியுள்ளது என நம்பப்பட்டது. மேலும், இந்த நிலவு, உருகிய பாறைகளாலேயே உருவானது என்றும் எண்ணப்பட்டது. மேலும், அந்த பாறைகள் குளிர்ச்சி அடையும் பொழுது, அடர்த்தியான தாதுக்களை கொண்ட பாறைகள் அடிப்பகுதியுலும், அதே சமயம் மென்மையான பாறைகள் மேற்பரப்பிலுமாக இந்த நிலவு உருவாகியிருக்கும் என கருதப்பட்டது.
இதை ஆராய பூமியிலிருந்து பல செயற்கைகோள்கள் நிலவிற்கு சென்றவாரே இருந்தது. இதற்காக சீனாவிலிருந்து அனுப்பபட்ட செயற்கைகோளான செங் 4(Chang'e 4), நிலவின் தென்துருவத்திலுள்ள ஐட்கென்(Aitken) பரப்பிற்கு அருகிலுள்ள, வோன் கர்மென்(Von Karmen) எரிமலைக்கு அருகில் தரை இறங்கியது. சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய எரிமலையாக கருதப்படுவது, இந்த வோன் கர்மென்(Von Karmen) எரிமலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிமலையின் அருகில் தரையிறங்கிய இந்த செயற்கைகோள், அங்குள்ள மேற்பரப்பில் ஒலிவைன்(Olivine) மற்றும் லோ-கால்சியம் பைராக்சின்(low-calcium pyroxene) ஆகிய தாதுக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது. இந்த தாதுக்கள், அந்த பரப்பில் வெறு எங்குமில்லாத அரிய தாதுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, இந்த ஆய்வின் முடிவுகளை நேச்சர்(Nature) என்ற பத்திரிக்கையில் வெளியிட்ட ஆசிரியர்கள் கூறுகையில், இந்த தாதுக்கள், நிலவின் மீது ஏதாவது விண்கல் மோதியதால், இங்கு படித்திருக்கலாம் என கூறுகிறார்கள்.
மேலும், நிலவின் மறுபக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி நமக்கு மற்றொரு தகவலும் தெரியவந்துள்ளது. பூமியை நோக்கியுள்ள நிலவின் பரப்பு எப்படி பெரும்பாலும் சம பரப்பாக உள்ளதோ, அதே மாதிரி நிலவின் மறுபக்கமும் அமைந்திடவில்லை. நிலவின் மறுபக்கம், மலைகள் நிறைந்ததாகவும், மிகவும் கரடுமுரடாக உள்ளது.
இது குறித்து, இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் இன் அஸ்ட்ரோபிசிக்ஸ் அண்ட் பிளானெலஜாலஜி பல்கலைகழகத்தை சேர்ந்த பேட்ரிக் பினெட் கூறியுள்ளது,"நிலவின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றி நாம் கொண்டுள்ள கருத்துகளை இந்த ஆய்வு மாற்றியமைக்கும்" என்று கூறியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Lyne Lancer 19 Pro With 2.01-Inch Display, SpO2 Monitoring Launched in India
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch