நிலவின் மறுபக்கத்தை ஆராய்வதற்காக சீனா செயற்கைகோள் ஒன்றை ஜிசாங்க் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
கியூகியாயோ என்று பெயரிட்டுள்ள இந்த செயற்கைகோள் சுமார் 400 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோள் 3 ஆண்டுகள் நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் இருந்து செயற்கைகோள் பிரிந்து 200 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள பூமி – நிலவு சுற்றுப்பாதைக்குள் நுழையும். அங்கிருந்து 455000 கிலோமீட்டர் தூரம் பயணித்து நிலவின் மறுபக்கத்தை அடையும்.
இந்த வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்சியில் சீனா முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்று சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
© Thomson Reuters 2018
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்