இந்தியா சார்பில் நிலாவுக்கு இரண்டாவது முறையாக ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 2, வரும் ஏப்ரல் மாதம் அனுப்பப்படும் நிலையில், தற்போது இந்த விண்கலம் நாசாவின் ஒரு ப்ரோபையும் கொண்டு செல்ல உள்ளது. இந்த கருவியின் மூலம் நிலாவின் தூரத்தை துல்லியமாக அளக்க முடியும் என்று கூறப்படுகிறது.
நாசா தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ரெட்ரோ ரிஃப்ளெக்டர் என்ற கருவியை சந்திராயன் 2 விண்கலத்தில் அனுப்பப் போவதாக லூனார் மற்றும் பிளானடேரி சைன்ஸ் கான்ஃபரென்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து நாசாவின் சைன்ஸ் மிஷன் இயக்குநர் லோரி கிளேஸ் கூறியதாவது, 'எங்காளல் இயன்றவரை நிலாவின் பரப்பளவை லேசர் ரிஃபிளக்டர் கொண்டு நிறப்ப முடிவு செய்துள்ளோம்' என்றுள்ளார். மேலும் இந்தத் திட்டத்தின் கால அட்டவணை குறித்து இயக்குநர் கிளேஸ் எவ்வித கருத்தும் கூறவில்லை.
ரெட்ரோ ரிஃபிளக்டர் என்பது அதிநவீன கண்ணாடியாகும். பூமியில் இருந்து விஞ்ஞானிகள், லேசரை செலுத்தி, கண்ணாடியின் பிரதிபலிப்பை அளப்பர். இதன் மூலம் நிலா - பூமிக்கு இடையில் இருக்கும் துல்லியமான தூரத்தை அளவிட முடியும் எனப்படுகிறது.
மேலும் 3,890-கிலோ எடையுள்ள சந்திராயன் -2-வில், ஜிஎஸ்எல்வி Mk-3 விண்கலம் இருக்கும். இது நிலாவின் நில அமைப்பு, கனிமவியல் மற்றும் புறவெளி மண்டலம் குறித்து ஆராயிச்சி நடத்த உள்ளது.
இந்த 800 கோடி ரூபாய் சந்திராயன் 2 திட்டம் இந்தியா சார்பில் நிலாவுக்கு சென்று ஆராய்ச்சி செய்த சந்திராயன் 1 சென்று சரியாக 10 வருடத்திற்கு பின்னர் அனுப்பப்படுகிறது. சந்திராயன் 1 அக்டோபர் 22,2008 ஆம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ)வின் முன்னாள் தலைவரான விக்ரம் சாராபாயின் பெயரை சந்திராயன் 2 லேண்டருக்கு வைக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2, நிலாவில் தரையிறங்கினால், நிலாவுக்கு ரோவர் அனுப்பிய 5வது நாடு என்ற பெறுமையை இந்தியா பெறும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்