Photo Credit: ISRO
சந்திரயான் -2 (Chandrayaan-2) செயற்கைகோளின் நிலப்பரப்பு மேப்பிங் கேமரா -2 எடுத்த சந்திரனின் மேற்பரப்பு மற்றும் அதன் பள்ளங்களின் புதிய புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) திங்கள்கிழமை வெளியிட்டது. இஸ்ரோவின் தகவலிம்படி, ஆகஸ்ட் 23 அன்று ஜாக்சன் (Jackson), மித்ரா (Mitra), மாக் (Mach) மற்றும் கொரோலெவ் (Korolev) போன்ற தாக்கக் பள்ளங்களைக் காட்டும் படங்கள் சுமார் 4,375 கி.மீ உயரத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
ஜாக்சன் (Jackson) என்பது சந்திரனின் வெகு தொலைவில் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஒரு தாக்க பள்ளம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. பள்ளத்தின் விட்டம் 71 கி.மீ.
மாக் (Mach) பள்ளத்தின் மேற்கு வெளிப்புற விளிம்பில் அமைந்துள்ளது இந்த மித்ரா (Mitra) (92 கி.மீ விட்டம்) என்னும் மற்றொரு தாக்க பள்ளம்.
"இந்திய இயற்பியலாளராக இருந்த பேராசிரியர் சிசிர் குமார் மித்ரா மற்றும் அயனி மண்டல மற்றும் கதிரியக்க இயற்பியல் துறையில் முன்னோடிப் பணிகளுக்காக அறியப்பட்ட பத்ம பூஷண் விருது பெற்ற அவரின் பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
படத்தில் காணப்படும் கொரோலெவ் (Korolev) பள்ளம் 437 கி.மீ அகலமுள்ள பள்ளம் ஆகும், இது மேலும் பல சிறிய அளவிலான பள்ளங்களைக் கொண்டுள்ளது.
இதுமட்டுமின்றி சோமர்ஃபெல்ட் (Sommerfeld) மற்றும் கிர்க்வுட் (Kirkwood) போன்ற தாக்க பள்ளங்களைக் காட்டும் படங்களையும் இஸ்ரோ வெளியிட்டது.
சோமர்ஃபெல்ட் என்பது சந்திரனின் தொலைதூர வடக்கு அட்சரேகைகளில் அமைந்துள்ள ஒரு பெரிய தாக்க பள்ளம். இது 169 கி.மீ விட்டம் கொண்டது.
இது ஒரு வளைய மலையால் சூழப்பட்ட ஒப்பீட்டளவில் தட்டையான உட்புறத்தைக் கொண்டுள்ளது மற்றும் பல சிறிய பள்ளங்கள் இதன் விளிம்பில் உள்ளன.
அணு மற்றும் குவாண்டம் இயற்பியல் துறையில் ஒரு முன்னோடி ஜெர்மன் இயற்பியலாளர் டாக்டர் அர்னால்ட் சோமர்ஃபெல்ட் (Dr. Arnold Sommerfeld) என்பவரின் பெயரால் இது பெயரிடப்பட்டது. மற்றொரு பள்ளம் அமெரிக்க வானியலாளர் டேனியல் கிர்க்வுட் (Daniel Kirkwood) என்பவரின் பெயரால் கிர்க்வுட் என பெயரிடப்பட்டுள்ளது, இது நன்கு உருவாக்கப்பட்ட மற்றொரு தாக்க பள்ளம், இது சுமார் 68 கி.மீ விட்டம் கொண்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மற்றொரு படம் தாக்கக் குழிகள் பிளாஸ்கெட் (Plaskett) (109 கி.மீ அகலம்), ரோஜ்டெஸ்ட்வென்ஸ்கி (Rozhdestvenskiy) (177 கி.மீ அகலம்) மற்றும் ஹெர்மைட் (Hermite) (104 கி.மீ அகலம், சூரிய மண்டலத்தின் குளிரான இடங்களில் ஒன்று) ஆகியவற்றை காண்பிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்